மனித உடலின் இயக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனித உடலின் இயக்கங்கள் (எலும்பு மண்டலம் ) மனித உடலின் அனைத்துச் செயல் பாடுகளும் எலும்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்தின் உதவியால் நடைபெறுகின்றன. மனித உடல் எலும்புகளால் ஆன கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு, தசைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு எலும்பு மண்டலம் எனப்படுகிறது. பெரும்பாலான தசைகள், உடலின் பல்வேறு உறுப்புகளின் இயக்கத்திற்கோ, உடல் நிலையாக நிற்பதற்கோ உதவுகின்றன. தசைகளால் எலும்புகளைத் தள்ள இயலாது, இழுக்க மட்டுமே இயலும். பல தசைகள் இணைகளாகப் பணியாற்றுகின்றன. எலும்புகளுடன் தசைகள், தசை நார்களால் இணைக்கப் பட்டுள்ளன. தசை நார் என்பது தடித்த இழை அல்லது தகடு போன்ற இணைப்புத் திசுவின் மாறுபட்ட அமைப்பாகும். ஒரு தசை இறுக்கப்படுவதன் மூலம் அதன் நீளம் சுருக்கப்பட்டு அதனுடன் இணைந்த எலும்பு இழுக்கப்படுகிறது. இறுகிய இத்தசையானது தளர்த்தப்பட்டு, அதன் இணைத் தசை இறுக்கப்படுவதன் மூலம் அந்த எலும்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது. எலும்பு கடினமானது. இது வெண்ணிற சாம்பல் நிறப் பொருள்களால் ஆனது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கனிமச் சேர்மங்கள் அல்லது கால்சியம், பாஸ்பேட், கார்பனேட்டுகள் போன்ற தனிமங்கள் அடங்கியுள்ளன. மீதி ஒரு பங்கு கரிமப் பொருள்களால் ஆனது. இது எளிதில் உடையக்கூடியதாகவும் உள்ளது. எலும்புகள் ஒரு திடப்பொருள் அல்ல. இவை வெளிப்புறத்தில் குறைந்த எடைகொண்ட கடினமான படலத்தாலும் நெருக்கமான பல அடுக்குகளாலும் ஆன எலும்புத் திசுக்களால் ஆனவை. எலும்பின் மையத்தில் கடற்பஞ்சு போன்ற பொருள்கள் உள்ளன. இவை எலும்பு மஜ்ஜை எனப்படும். இவை இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்களை உற்பத்தி செய்கின்றன. நமது உடலின் தனித்தன்மை கொண்ட இன்றியமையாத, முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளை எலும்புகள் பாதுகாத்துப் பராமரிக்கின்றன. மேலும் இவை உடல் இயக்கத்திற்கும் உதவுகின்றன. எலும்பானது கடினமான தோலால் மூடப்பட்டுள்ளது. இந்த வெளியுறைக்குப் பெரியாஸ்டியம் என்று பெயர். நம் உடலில் காணப்படும் அனைத்து எலும்புகளையும் வடிவத்தின் அடிப்படையில் நான்கு முதன்மை வகைகளாக வகைப்படுத்தலாம்.

மூட்டுகள் மற்றும் வகைகள்[தொகு]

எலும்புகள், மூட்டுகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. மூட்டுகள் இரண்டு எலும்புகளுக்கு இடையே அமைந்த உறுதியான இணைப்பு இழை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு இழைகள் இணைப்புத் திசுக்களால் உருவானவை. மூட்டு என்பது எலும்புகளுக்கு இடையிலும், குருத்தெலும்புகளுக்கு இடையிலும், பற்கள், எலும்புகளுக்கும் இடையிலும் இணைப்பை ஏற்படுத்தும் பகுதியாகும். முழங்கை மூட்டின் இயக்கத்தைப் கையினை நீட்டி மடக்கும்போது முழங்கையில் உள்ள கீல்மூட்டு செயல்படுவதையும், அத்துடன் கையில் உள்ள இரு தசைகளான இருதலைத்தசை மற்றும் முத்தலைத் தசை எவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான திசையில் செயல்படுகின்றன என்பதையும் தெளிவாக அறியலாம். கையினை மடக்கும் போது மேற்கையில் உள்ள இருதலைத் தசைகள் சுருங்கித் தடிமனாவதையும் கையினை நீட்டும்போது தளர்ந்து நீள்வதையும் காணலாம். இதுபோலக் கையினை மடக்கும் போது முத்தலைத் தசைகள் தளர்ந்து நீண்டும், நீட்டும்போது இத்தசைகள் சுருங்கி தடிமனாவதையும் காணலாம்.

 • நீளமான எலும்பு தொடை எலும்புகள், கால் எலும்புகள் கால்விரல் எலும்புகள், கையெலும்பு, முன்கையெலும்பு கைவிரல் எலும்புகள்
 • குட்டையான எலும்பு மணிக்கட்டு, கணுக்கால் எலும்பு
 • தட்டையான எலும்பு மண்டையோட்டு எலும்புகள் தோள்பட்டையில் உள்ள காரை எலும்பு, தோள்பட்டையில் உள்ள மார்பெலும்பு
 • ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள் முதுகெலும்புத் தொடரில் கடைசியாக உள்ள வால் எலும்பு, மண்டையோடு, முக எலும்புகள்

மூட்டுகளின் இணைப்பு[தொகு]

 1. நாரிணைப்பு மூட்டுகள்

இதில் இணைப்புத் திசு நார்களால் எலும்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையில் திரவ இடைவெளி இல்லை. அசைவுகள் இல்லை. ஒவ்வொன்றும் தையல் இணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. மண்டையோட்டு எலும்பு, முழங்கால்எலும்புகள், கணுக்கால் எலும்புகளுக்கு இடையேயான இணைப்பு.

 1. குருத்தெலும்பு மூட்டுகள்

எலும்புகள், குருத்தெலும்புகள் மூலம் இணைந்துள்ளன. இதில் சினோவியல் திரவ இடைவெளி இல்லை. காது மடல், மூக்கின் நுனி, மார்பெலும்பு

 1. திரவ மூட்டுகள்

(அல்லது) சினோவியல் மூட்டுகள் இந்த மூட்டுகள் குறிப்பிட்ட திசைகளில் அசையக்கூடியவை. இவைகளுக்கிடையே இடைவெளி உள்ளது. மூட்டுகள் குருத்தெலும்பாலும் சினோவியல் சவ்வாலும் ஆனவை. இந்த இடைவெளியில் சினோவியல் திரவம் உள்ளது. இடுப்பு, தோள்பட்டை எலும்பு சேருமிடம், முழங்கை, முதல் கழுத்து முள்ளெலும்பு, இரண்டாவது கழுத்து முள்ளெலும்பு, கணுக்கால் எலும்புகளில் காணப்படும். இணைப்பு இழை இடுப்பெலும்பு பந்து சினோவியல் திரவம் சினோவியல் படலம் இடுப்பில் உள்ள அசையும் மூட்டு மூட்டுகளின் வகைகள் மூட்டுகள் அவற்றின் அசைவின் அடிப் படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூட்டுகள் சில அசையா. இவற்றை அசையா மூட்டுகள் என்கிறோம். சில மூட்டுகள் சிறிது அசையக்கூடியவை. எனவே இவற்றை சிறிது அசையும் மூட்டுகள் எனவும், சில மூட்டுகள் நன்றாக அசையக்கூடிய வகையில் உள்ளன. எனவே இவற்றை அசையும் மூட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கீல் மூட்டு எ.கா. முழங்கால், முழங்கை இதில் இணையும் இரு எலும்புகளில் ஒன்றின் முனை குவிந்தும், மற்றொரு எலும்பின் முனை குழிந்தும் காணப்படும். குவிந்த பகுதி, குழிந்த பகுதியுடன் இணைந்திருக்கும். வழுக்கு மூட்டு எ.கா. கணுக்கால் எலும்பு, உள்ளங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு, மார்பெலும்பு. இதில் இணையும் எலும்புகளின் மேற்பகுதி வழவழப்பாகவும், தட்டையாகவும் இருக்கிறது. இது அச்சை மையமாகக் கொண்டு இயங்குவதில்லை. முளை மூட்டு சில திரவ மூட்டுகள் (சினோவியல் மூட்டுகள்) பந்துக் கிண்ண மூட்டு எ.கா. தோள்பட்டை, இடுப்பு எலும்புகள். இதில் இணையும் இரு எலும்புகளில் ஒரு எலும்பின் முனை பந்து போலவும், மற்றொரு எலும்பின் முனை கிண்ணம் போலவும் காணப்படுகிறது. எ.கா. முதல், இரண்டாவது கழுத்து முள் எலும்புகள். இதில் இணையும் இரு எலும்புகளில் ஒன்றின் முனை கூர்மையாகவும், உருளையாகவும் கூம்பு வடிவத்திலும் காணப்படும். மற்றொரு எலும்பானது இதன் மீது வட்டமுனையாக சுழல்வது போல அமைந்துள்ளது. இதில் இணைப்பு இழை பாதி அளவில் உள்ளது. இது தலையினை இடவலமாகத் திருப்பப் பயன்படுகிறது. எலும்புக்கூடு நம்முடைய அசைவுகளான நடப்பது, ஓடுவது போன்ற பல விதமான அசைவுகளுக்கும் எலும்புக்கூடானது ஒரு கருவி போன்று செயல்படுகின்றது. எலும்புக்கூட்டின் அமைப்பு மற்றும் பிரிவுகள் மனித எலும்புக்கூட்டில் உள்ள அனைத்து எலும்புகளையும் நம்மால் எண்ண முடியும். மனித எலும்பு கூட்டில் 206 எலும்புகள் உள்ளன. இவைகள் அச்சுச் சட்டகம், இணையுறுப்புச் சட்டகம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மனித எலும்புக் கூடு அச்சுச் சட்டகம் இணையுறுப்புச் சட்டகம் மண்டையோடு உச்சி மண்டை எலும்பு கண்குழி மூக்கெலும்பு மேல்தாடை எலும்பு கீழ்த்தாடை எலும்பு மனித மண்டையோடு முதுகெலும்பு மார்புக்கூடும் மார்பெலும்புகளும் தோள் வளையம், மேல் பக்க உறுப்பு எலும்புகள் இடுப்பு வளையம், கீழ்ப் பக்க உறுப்பு எலும்புகள் கழுத்துப் பட்டை எலும்புகள் மார்பு முள் எலும்புகள் இடுப்பு முள் எலும்புகள் முதுகெலும்பு வட்டுக்கள் திருகெலும்பு வால் எலும்பு முதுகெலும்புத் தொடர் மனித எலும்புக் கூடு மண்டை ஓடு தோள் பட்டை எலும்பு விலா எலும்புகள் முதுகுத் தண்டு தொடை எலும்பு இடுப்பெலும்பு

மார்பெலும்பு மிதக்கும் விலா எலும்புகள் உண்மை விலா எலும்புகள் பொய் விலா எலும்புகள் விலா எலும்புகள், மார்பெலும்புகள் முதல், இரண்டாவது முள்ளெலும்பு அச்சுச் சட்டகம்' முதுகெலும்பானது வளைந்த தனி சிறப்பான அமைப்பினைப் பெற்றுள்ளது. இது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:

 1. கழுத்துப்பகுதி - இப்பகுதியில் ஏழு முள்ளெலும்புகள் உள்ளன.
 2. மார்புப்பகுதி - இப்பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளன.
 3. வயிற்றுப்பகுதி - இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.
 4. திருகெலும்பு (இடுப்புப் பகுதி) இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.
 5. வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு)இதில் 4 முள்ளெலும்புகள் உள்ளன.

மார்புக்கூடும் மார்பெலும்புகளும்[தொகு]

இது நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளை மூடிப் பாதுகாக்கிறது. இதில் 12 இணை (24) விலா எலும்புகள் உள்ளன. விலா எலும்புகளும், மார்பெலும்புகளும் , முதுகெலும்பும் இணைந்து மார்புக் கூடாக உள்ளன. இதில் முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்பெலும்புடன் இணைந்திருக்கின்றன. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும். இதனை அடுத்துள்ள 3 இணை விலா எலும்புகள் மார்பெலும்புடன் நேரிடையாக இணைக்கப்படவில்லை. இவை பொய்விலா எலும்புகள் எனப்படும். இறுதியில் உள்ள இரண்டு 11, 12 ஆவது இணை விலா எலும்புகள் சிறிதாகவும், மார்பெலும்புடன் இணையாததாகவும் இருக்கும், இந்த இணையாத விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும். நம் உடலில் உள்ள மிக நீளமான எலும்பு, மிகச் சிறிய எலும்பு ● மனித உடலில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு, தொடை எலும்பு ஆகும். சராசரி மனிதஉடலில், இதன் நீளம் சுமார் 45 செமீ ஆகும். ● நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு உள் காதில் உள்ள அங்கவடி எலும்பாகும். இணையுறுப்புச் சட்டகம் தோள் பட்டை எலும்பு, இடுப்பு எலும்பு வளையங்கள், கை, கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சட்டகத்தில் எலும்புகள் எலும்புகளின் எண்ணிக்கை அச்சுச்சட்டகம் 80, இணையுறுப்பு எலும்புகள் 126 மொத்தம் 206 காரை எலும்பு தோள்பட்டை எலும்பு மேற்கை எலும்பு ஆர எலும்பு முன்கை எலும்பு மணிக்கட்டு எலும்புகள் உள்ளங்கை எலும்புகள் விரல் எலும்புகள் வலது தோள் வளையம், மேல்பக்க உறுப்பு எலும்புகள் வலது இடுப்பு வளையம், கீழ்ப்பக்க உறுப்பு எலும்புகள் இடுப்புக் குழி முக்கோண எலும்பு தொடை எலும்பு முழங்கால் எலும்பு கீழ்க்கால் எலும்பு கணுக்கால் எலும்பு உள்ளங்கால் எலும்புகள் விரல் எலும்புகள்

சட்டகத்தின் வேலைகள்[தொகு]

தாங்குதல் இது உடலைத் தாங்கி, வடிவத்தினைக் கொடுக்கிறது. பாதுகாத்தல் இதயம், மூளை, நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. இயக்கம் இயக்கத்தில் எலும்புகள் நெம்புகோல் போன்று செயல்பட்டு, அசைவுகளுக்கு உதவுகிறது. சேமிக்கும் தாது உப்புகள் கால்சியம், பாஸ்பேட், கார்பனேட் போன்ற சில தாது உப்புகளைச் சேமித்து வைக்கிறது. இரத்த செல்களின் உற்பத்தி: எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுகள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.

[1] [2]

[3]

 1. http://www.innerbody.com/
 2. https://en.wikipedia.org/wiki/Human_body
 3. https://www.britannica.com/science/human-body