மனிதம் (இதழ்)
Appearance
மனிதம் 1987 இலிருந்து 1994 வரை சுவிசிலிருந்து இரு மாதத்துக்கு ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். மொத்தம் 30 இதழ்கள் வரை வெளிவந்திருக்கிறது. அரசியல், இலக்கியம், சினிமா, வரலாறு, விமர்சனம் என பல்வேறு வகைப்பட்ட உள்ளடக்கங்களுடன் வெளிவந்தன. இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருந்தது. அத்துடன் 5 காணொளிச் சஞ்சிகைகளும் மனிதம் என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டன.