உள்ளடக்கத்துக்குச் செல்

மனிசா பண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிசா பண்ணா
Manisa Panna
சுய தகவல்கள்
முழுப் பெயர்மனிசா பண்ணா
பிறந்த நாள்20 ஏப்ரல் 1991 (1991-04-20) (அகவை 35)
பிறந்த இடம்தாண்டியாபள்ளி, சுந்தர்கர், ஒடிசா, இந்தியா
ஆடும் நிலை(கள்)தடுப்பாட்டக்காரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
நிட்டா காற்பந்து அகாதமி
எண்3
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2016–2017ரைசிங் சுடூடண்ட்சு கிளப்11(1)
2018கிழக்கு விளையாட்டு ஒன்றியம்
2019கோலாப்பூர் நகரப் பெண்கள் காற்பந்து அணி
2020–2021கோகுலம் கேரளா பெண்கள் அணி
2022ஒடிசா விளையாட்டுத்துறை11(0)
2022–2023கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா)
2023–2024ஒடிசா பெண்கள் காற்பந்து அணி
2024–நிட்டா கால்பந்து அகாதமி
பன்னாட்டு வாழ்வழி‡
2015–இந்தியப் பெண்கள் தேசிய காற்பந்து அணி31(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 1 நவம்பர் 2023 அன்று சேகரிக்கப்பட்டது.

மனிசா பண்ணா (Manisa Panna) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில் முறை கால்பந்து வீரர் ஆவார். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசாவைச் சேர்ந்த மனிசா பன்னா, தனது கிராமத்தில் வேறு எந்தப் பெண்களும் கால்பந்தில் ஆர்வம் இல்லாததால், சிறுவர்களுடன் விளையாடி வளர்ந்தார். இவரது மறைந்த தந்தையே இவரது முதல் பயிற்சியாளராகவும் இருந்தார். இந்திய மகளிர் கூட்டமைப்பு கழக நிட்டா கால்பந்து அகாதமி மற்றும் இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காக தடுப்பாட்டக்காரராக விளையாடுகிறார்.[1] 2015–16 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் கலந்து கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[2] முன்னதாக இந்திய மகளிர் கூட்டமைப்பு போட்டிகளில் கேரளாவின் கோகுலம் கால்பந்து அணிக்காகவும், ஒடிசா அணிக்காகவும் விளையாடினார்.

பன்னாட்டுப் போட்டிகள்

[தொகு]

மனிசா பண்ணா 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஒரு பகுதியாக விளையாடி தேசிய அணியில் ஒரு தடுப்பாட்ட வீரராக இடம்பிடித்து விளையாடுகிறார். முதலில் 2015-16 ஆசிய காற்பந்து சம்மேளன மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாடினார். பின்னர் இவர் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 தெற்கு ஆசிய காற்பந்து கூட்டமைப்பு மகளிர் காற்பந்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடினார்.

பன்னாட்டு அளவு

[தொகு]
1 நவம்பர் 2023. அன்று இருந்த தகவல்களின் படி
பன்னாட்டு போட்டிகளும் அடித்த இலக்குகளும்
ஆண்டு போட்டிகள்அடித்த
இலக்குகள்
2015 1 0
2016 7 0
2017 7 0
2018 2 0
2019 0 0
2021 5 0
2022 4 0
2023 5 0
Total 31 0

கௌரவங்கள்

[தொகு]

இந்தியா

  • 2016 தெற்கு ஆசிய காற்பந்து கூட்டமைப்பு மகளிர் காற்பந்து போட்டிகள்
  • 2016 தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தங்கம் [3]

ஒடிசா

  • இந்திய மகளிர் கூட்டமைப்புப் போட்டிகள்: 2023–24 இந்திய மகளிர் கூட்டமைப்புப் போட்டிகள்[4]

கோகுலம் கேரளா

  • இந்திய மகளிர் கூட்டமைப்பு போட்டிகள்: [[2019–20 இந்திய மகளிர் கூட்டமைப்பு போட்டி[5]

ஒடிசா (மாநிலம்)

இரயில்வே அணி

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Pani, Sanatan. "Orisports.com".
  2. ↑ WOMEN`S OLYMPIC FOOTBALL TOURNAMENT 2016. the-afc.com.
  3. ↑ "20 selected in Indian squad for 12th South Asian Games". AIFF. 1 February 2016. Retrieved 10 December 2023.
  4. ↑ "Odisha FC take home the IWL trophy with stunning ease". I-League. 24 March 2024. https://i-league.org/odisha-fc-take-home-the-iwl-trophy-with-stunning-ease/.
  5. ↑ "Gokulam Kerala crowned champion of IWL 2020 - As it happened". Sportstar. 13 February 2020.
  6. ↑ "Orissa win maiden title in Senior Women NFC". Orisports. 18 May 2011. Retrieved 22 November 2022.
  7. ↑ "National Games 2022, October 10 HIGHLIGHTS: Manipur wins women's football gold; Tamil Nadu tops Group A in men's volleyball". Sportstar. 10 October 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிசா_பண்ணா&oldid=4392504" இலிருந்து மீள்விக்கப்பட்டது