மனிசா சிரோத்ரா
மனிசா சிரோத்ரா, (பிறப்பு 1969) இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த பெண் வணிக நிர்வாகியாவார். மொய்லிஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இவர்,முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முதலீட்டு வங்கியியல், நிதி மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் கடன் ஆதரவு போன்றவைகளில் அனுபவம் கொண்டுள்ளார், பரந்த அளவிலான வங்கி மற்றும் நிதி தொழில்களில் பரந்த எல்லை தாண்டிய நிபுணத்துவம் கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், பெங்களூரூவைச் தொழில்நுட்ப சேவை நிறுவனமான மைண்ட்ட்ரீ, உலகளாவிய சுயாதீன முதலீட்டு வங்கியான யுபிஎஸ் மற்றும் பார்க்லேஸ் டி ஸோட் வெட் இன் முதலீட்டு வங்கியின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த மனிசாவை அதன் இயக்குநர்களில் ஒருவராக நியமித்துள்ளது.[2] சிரோத்ரா, புனித ஸ்டீபன் கல்லூரி, [[தில்லி|டெல்லி]]யில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்ட படிப்பில் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். [3]
மனிசாவின் தந்தை, யூகோ வங்கியின் தலைமைவராக இருந்துள்ளதால், வங்கி மற்றும் நிதி மேலாண்மைகளில் இவருக்கு ஈடுபாடும், ஆர்வமும் இருந்தது. எனவே 1998 ஆம் ஆண்டு யூபிஎஸ் வங்கியில் பணிக்கு சேர்ந்து2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் அங்கிருந்து ராஜினாமா செய்வதற்கு முன்பாக வரை, அதன் இந்திய பிரிவிற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். பல்வேறு தனியார் நிறுவன முதலீட்டுகளை கையாண்டு, கையகப்படுத்தி, மேலாண்மை செய்துள்ளார். அதன்மூலம், தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையில் 'கவனிக்கப்படவேண்டிய சிறந்த 50 உலகப் பெண்களில்' ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார். இலண்டன் பொருளியல் பள்ளியிலும்,பொருளாதாரத்தில் பட்டம் என இரட்டைப் பட்டம் பெற்ற மனிசா, தனது முதலீட்டு வங்கி வாழ்க்கையை லண்டனில் உள்ள ஏஎன்இசட் கிரைண்ட்லேஸ் என பெருநிறுவன வங்கியில், 1992 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். 1994 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றின அவர், 1996 ஆம் ஆண்டு வரை, பார்க்லேஸ் வங்கியின் வட இந்திய செயல்பாடுகளுக்கு தலைவராக பணியாற்றியுள்ளார்.
மனிசா, 2010 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதார மன்றத்தால் வளரும் இளம் உலகத் தலைவராக கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் 2008 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் "ஆசியாவில் கவனிக்கப்படவேண்டிய பதினைந்து பெண்களில்" ஒருவராகவும், வருடாந்திர வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கணக்கெடுப்பில் "கவனிக்கப்படவேண்டிய ஐம்பது பெண்களில்" ஒருவராகவும் பட்டியலிட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பிசினஸ் டுடே பத்திரிகையில் “இந்தியாவில் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த இருபத்தைந்து பெண்கள்” என்ற பட்டியலிலும், 2014 ஆம் ஆண்டில் பார்ச்சூன் இந்தியாவின் “வணிகத்தில் ஐம்பது சக்திவாய்ந்த பெண்கள்” என்ற பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
மனிசா, தற்போது குளோபல் போர்டு ஆஃப் நாஸ்பர்ஸிலும் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். மேலும் அசோக் லேலண்ட் மற்றும் மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் ஆர்இஐடி போன்ற நிறுவனங்களில்,வாரிய உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
மனிசா, டாய்ச் வங்கியின்(முதலீட்டு வங்கி) நிர்வாக இயக்குனரும் தலைவருமான சஞ்சய் அகர்வாலை மணந்துள்ளார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ World Economic Forum (2017-10-06), India's Women in the Workforce, archived from the original on 2021-12-20, பார்க்கப்பட்ட நாள் 2018-03-24
- ↑ "மைண்ட்ட்ரீ, மனிஷா கிரோத்ராவை நிர்வாகக் குழு உறுப்பினராக இணைத்துக்கொள்கிறது".
- ↑ "Life of Manisha Girota". Archived from the original on 2007-12-28. பார்க்கப்பட்ட நாள் 2023-03-21.
- ↑ "Senior Leadership". www.moelis.com. Archived from the original on 2015-12-23. பார்க்கப்பட்ட நாள் 2015-12-23.