மனிசா சிங்
மனிசா சிங் | |
|---|---|
| உறுப்பினர்-16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் திசம்பர் 2023 | |
| முன்னையவர் | ஜெய்சிங் மாரவி |
| தொகுதி | ஜெய்சிங்நகர் (சட்டமன்றத் தொகுதி) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1982 ஜெய்த்புரா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | இராஜேந்திரசிங் |
| கல்வி | முதுகலை - அரசறிவியல் |
| முன்னாள் மாணவர் | அவதேசு பிரதாப் சிங் பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
மனிசா சிங் (Manisha Singh)(பிறப்பு 1982) என்பவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மத்தியப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக ஜெய்சிங்நகர் சட்டமன்றத் தொகுதி (இது ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது) பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ஜெய்த்பூரில் உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சிங். 2007-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள அவதேஷ் பிரதாப் சிங் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] இவரின் கணவர் ராஜேந்திர சிங் ஒரு தொழிலதிபர்.
அரசியல்
[தொகு]2023 மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெய்சிங்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சிங் வெற்றி பெற்றார். சிங் இந்திய தேசிய காங்கிரசின் நரேந்திர சிங் மரவியை 37,951 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ english. "manisha singh madhya-pradesh manisha-singh-jaisinghnagar candidate Profile,Candidates Net Worth, Education News | ABP Live News". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-05-29.
- ↑ "Candidates Detail: Manisha Singh". www.business-standard.com.
- ↑ "Manisha Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- JAISINGHNAGAR (ST)(SHAHDOL) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-05-29.
- ↑ "Jaisinghnagar Assembly Election Results 2023 Highlights: BJP's Manisha Singh wins Jaisinghnagar with 114967 votes". India Today (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-05-29.