மனிசா அனுராகி
தோற்றம்
மனிசா அனுராகி | |
|---|---|
| சட்டப் பேரவை உறுப்பினர்- உத்தரப் பிரதேசம் | |
| குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| Incumbent | 2017 |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மனிசா 1 சூலை 1981 ஜாலவுன், ஜாலவுன் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| பிள்ளைகள் | 1 மகன் |
| பெற்றோர் | பிரிஜ்கிசோர் வர்மா |
மனிசா அனுராகி (Manisha Anuragi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மனிசா உத்தரப் பிரதேசத்தின் இரத் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மனிசா புந்தல்கந்த் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் ஆய்வு நிறைஞர் பட்டத்தினை முதுநிலை அறிவியல் கல்வியினை முடித்த பிறகு பெற்றார். மேலும் இவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு பேராசிரியராக வேண்டும் என்று திட்டமிட்டார். 2010-இல் அதற்குத் தயாராகி வந்தபோது, அவர் தனது குடும்பத்தினரின் விருப்பப்படி லெக்ராம் அனுராகியை மணந்தார். லெக்ராம் வனத்துறையில் பணியாளராக நியமிக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "हमीरपुर के छिबौली कांड को लेकर सीएम से मिलीं राठ विधायक मनीषा अनुरागी". m.jagran.com (in இந்தி). Retrieved 2021-12-11.
- ↑ "Manisha Anuragi jeevan parichay : मनीषा अनुरागी पति की सलाह पर पॉलिटिक्स में उतरी और बन गई माननीय". पर्दाफाश (in இந்தி). Retrieved 2021-12-12.