உள்ளடக்கத்துக்குச் செல்

மனார் ஃபயாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனார் ஃபயாத்து (Manar Fayyad) என்பவர் இயோர்தான் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆவார். மனார் காலித் ஃபயாத்து, அல் ஃபயாத்து [1] என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். செருமன் இயோர்டானிய பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.[2][3][4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இயோர்டான் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளநிலை (1972) மற்றும் முதுநிலை (1974) பட்டங்களைப் பெற்றுள்ளார். செருமனியின் பான் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் (1978) பட்டம் பெற்றுள்ளார். தாண்டல் உலோக அணைவுச் சேர்மங்களில் ஈந்தணைவிகளாக கந்தகம் -நைட்ரசன் மற்றும் பாசுபரசு சேர்மங்கள் என்ற தலைப்பிலாகும்.[5] நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் இவரது நிபுணத்துவம் இருந்தது.[2] மேலும் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம், பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம், சுவீடிய பன்னாட்டு மேம்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் அரசாங்கம் உள்ளிட்ட அமைப்புகளால் நிதியளிக்கப்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு திட்டங்களில் ஈடுபட்டார்.[3]

1978 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இயோர்டான் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் பேராசிரியராகவும், 1999 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை அதன் நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் (துணை இயக்குநர் 1992-1999) இருந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை செருமன் இயோர்டானிய பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரானார். 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Professorin Dr. Manar Al Fayyad neue Präsidentin der German-Jordanian University". www.german-jordanian.org. German-Jordanian University. 24 August 2017. Archived from the original on 11 April 2021. Retrieved 1 October 2020.
  2. 2.0 2.1 "Prof. Manar Fayyad". www.gju.edu.jo (in ஆங்கிலம்). German Jordanian University. Archived from the original on 27 October 2020. Retrieved 1 October 2020.
  3. 3.0 3.1 Fayyad, Manar. "CV" (PDF). German Jordanian University. Archived from the original (PDF) on 15 July 2019. Retrieved 1 October 2020.
  4. "A Word from the President" (in ஆங்கிலம்). German Jordanian University. 18 September 2014. Retrieved 1 October 2020.
  5. Catalogue record for Fayyad's thesis. Worldcat. கணினி நூலகம் 65258706.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனார்_ஃபயாத்து&oldid=4417827" இலிருந்து மீள்விக்கப்பட்டது