மனாகுவா ஏரி
மனாகுவா ஏரி | |
---|---|
![]() 1986ல் மனாகுவா ஏரி | |
ஆள்கூறுகள் | 12°20′N 86°25′W / 12.333°N 86.417°W |
முதன்மை வெளியேற்றம் | திபிதாபா ஆறு |
வடிநில நாடுகள் | நிக்கராகுவா |
அதிகபட்ச நீளம் | 65 km (40 mi) |
அதிகபட்ச அகலம் | 25 km (16 mi) |
மேற்பரப்பளவு | 1,024 km2 (395 sq mi) |
சராசரி ஆழம் | 9.5 m (31 அடி) |
அதிகபட்ச ஆழம் | 20 m (66 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 39 m (128 அடி) |
குடியேற்றங்கள் | மனாகுவா |

மனாகுவா ஏரி (Lake Managua), நிக்கராகுவா நாட்டில் உள்ள நிக்கராகுவா ஏரிக்கு வடக்கில் அமைந்த ஒரு நன்னீர் ஏரி ஆகும்.. இதன் கரையில் நாட்டின் தலைநகரான மனாகுவா நகரம் உள்ளது. மனாகுவா எரி 1,042 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 65 கிலோ மீட்டர் நீளமும்; 25 கிலோ மீட்டர் அகலமும்; 5 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மனாகுவா ஏரியிலிருந்து திபிதாபா ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து கரிபியக் கடலில் கலக்கிறது. மனாகுவா ஏரிப் பகுதிகளில் பூர்வகுடிகளாக நிக்கராவ் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.[1] இந்த ஏரியில் மக்கள் வாழாத இரண்டு தீவுகள் உள்ளது. அவற்றில் ஒன்று எரிமலைத் தீவு ஆகும்.
மாசு
[தொகு]மனாகுவா ஏரியைச் சுற்றி அமைந்த மனாகுவா நகரத்தில் 16,80,100 மக்கள் வாழ்வதாலும், 1927ஆம் ஆண்டிலிருந்து மனாகுவா நகரத்தின் கழிவுகள் மனாகுவா ஏரியில் கொட்டப்படுவதாலும் மனாகுவா ஏரி நீர் மிகவும் மாசடைந்துள்ளது.[2] 2009ஆம் ஆண்டில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் ஆலை நிறுவப்பட்டதால், மனாகுவா நகரத்தின் 40% கழிவு நீர் சுத்திகரித்து ஏரியில் விடப்படப்படுகிறது.