மனவீயம் சாலை

மனவீயம் சாலை (Manaveeyam Veedhi) என்பது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாலையாகும். நேப்பியர் அருங்காட்சியகம்-வெள்ளையம்பலம் சாலையில் உள்ள வயலார் ராமவர்மாவின் சிலையிலிருந்து ஆல்தாரா சந்திப்பில் உள்ள ஜி. தேவராஜன் மற்றும் பு. பாஸ்கரன் சிலைகள் வரை 180 மீ நீளமுள்ள இந்த சாலை, சாலையோரம் காட்சிப்படுத்தப்பட்ட ஏராளமான கலைப் படைப்புகளுக்கும், ஏராளமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது. தெரு நாடக நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலை விழாக்கள் இந்த சாலையில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. [1]
மனவீயம் சாலையில் கலாசார நிகழ்வுகள் நடத்தப்பட்ட வரலாற்றை 1995 ஆம் ஆண்டிலேயே காணலாம். இந்த இடத்தில் தெரு நாடகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. 2001ல் அப்போதைய சட்டப்பேரவை சபாநாயகர் எம். விஜயகுமார், கலாசார நிகழ்ச்சிகளுக்கான மையமாக இந்த சாலையை திறந்து வைத்தார். [2] 2011 ஆம் ஆண்டில், தனது ‘மனவீயம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு இந்த சாலையில் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் நாடக நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தியது. ஜி.சங்கர பிள்ளையின் பல நாடகங்களின் நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன. பின்னாளில், கேரளாவைச் சேர்ந்த ஓ. என். வி. குறுப்பு, அடூர் கோபாலகிருஷ்ணன், சுகதகுமாரி உட்பட பலர் இந்த சாலையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஓவியக் கலைஞர் நம்பூதிரி உட்பட கேரளாவைச் சேர்ந்த பல பிரபல கலைஞர்களும் சாலையோர சுவர்களில் கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
மறைந்த எழுத்தாளர் கமலா சுரய்யாவின் நினைவாக கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த சாலையில் கவிஞரும் ஆர்வலருமான சுகதகுமாரி அவர்களால் மாவிலங்கம் மரம் நடப்பட்டது.[3] [4] கலை முயற்சிகளைத் தொடரவும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்கள் கவலைகள் மற்றும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கவும் பெண்கள் குழுக்கள் அடிக்கடி இந்த இடத்தில் கூடிவருகின்றன. இந்த இடம் மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்பதால் அவர்கள் கவலைப்பட்டனர்
சாலைப்பணிகள்
[தொகு]சீர்மிகு சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டுமான பணிக்காக சாலை தோண்டப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. [5]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manaveeyam Veedhi now has its website". 1 March 2016. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/manaveeyam-veedhi-now-has-its-website/article8299953.ece.
- ↑ . 6 March 2016.
- ↑ "When Neermathalam bloomed". Times of India. 24 April 2018. https://timesofindia.indiatimes.com/city/kochi/when-neermathalam-bloomed/articleshow/63890791.cms. பார்த்த நாள்: 10 March 2019.
- ↑ "Thiruvananthapuram's cultural hub Manaveeyam Veedhi to get facelift". the news minute. 2 July 2018. https://www.thenewsminute.com/article/thiruvananthapurams-cultural-hub-manaveeyam-veedhi-get-facelift-84062. பார்த்த நாள்: 10 March 2019.
- ↑ "Thiruvananthapuram's Manaveeyam Veedhi remains distant dream". 26 January 2023. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2023/jan/26/thiruvananthapuramsmanaveeyam-veedhi-remains-distant-dream-2541451.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Cultural Corridor Article on Manaveeyam Veedhi from The Hindu, 2015.