மனம் வருந்தும் மகதலேனா (டொனாட்டெல்லோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனம் வருந்தும் மகதலேனா
ஓவியர்டொனாட்டெல்லோ
ஆண்டு1453-1455
வகைமரம்
பரிமானங்கள்188 cm
இடம்மியூஸோ டெல்' ஓ பெரா டெல் டியோமோ, புளோரன்ஸ்

மனம் வருந்தும் மகதலேனா என்பது இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தைச் சார்ந்த சிற்பி, டொனாட்டெல்லோவால் 1453–1455 காலகட்டங்களில்  உருவாக்கப்பட்ட மகதலேனா மரியாளின் சிற்பம். இந்தச் சிற்பம் அநேகமாக  புளோரன்ஸில் உள்ள தீக்கையிடத்திற்கென்றுச் செய்யப்பட்டதாக இருக்கலாம். இச்சிற்பம் தன்னுடைய அபூர்வமான யதார்த்தத்தினால் அனைவரையும் மலைப்படையச் செய்தது. இது தற்போது  புளோரன்ஸ் நகரத்திதிலுள்ள   மியூஸோ டெல்' ஓபெரா டெல் டியோமோவில் அமைந்துள்ளது . இச்சிற்பத்தைைச் செய்வதற்கு  டொனாட்டெல்லோ வெள்ளை புன்னை மரத்தை பயன்படுத்தி்யிருக்கிறார் .

படிமவியல்[தொகு]

வழக்கமாக கலைகளில் தனியாக சித்தரிக்கப்படும் மகதலேனா மரியாள் போல் தான் இந்த மனம் வருந்தும் மகதலேனாவும் என்றாலும் மற்ற சித்தரிப்புகளில் கிட்டத்தட்ட பரிபூரண ஆரோக்கியத்தில் ஒரு அழகான இளம் பெண்ணாக காண்பிக்கபட்டிருக்கும் ஆனால் டொனாட்டெல்லோவின் இந்த மென்மையான , உடல் மெலிந்த வடிவம் பொரும்பாலான சித்தரிப்புகளிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. இச்சிற்பம் நுணுக்கமான மற்றும் மிக யதார்த்தமான சிற்பவேலையைக் கொண்டுள்ளதால் பிரபலமாக உள்ளது.

மேற்கத்திய திருச்சபையில் ,இடைக்கால புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றியல்,மகதலேனா மரியாளின் உருவத்தை பெத்தானியாவின் மரியாருடனும், இயேசுவை அபிஷேகித்த பெயரிடப்படாத பாவியினுடனும் எகிப்தின் புனித மரியாருடனும் குழப்பிக் கொண்டது.எகிப்தின் புனித மரியாள் கிழக்கு திருச்சபையில் ஒரு பிரபலமான நபராக இருந்தார். பாலைவனத்தில் மனந்திருந்தி முப்பது ஆண்டுகள் கழிப்பதற்கு முன் அவள் ஒரு வேசியாக இருந்தாள்.

டொனாட்டெல்லோவின் சித்தரிப்பு கிழக்கு ஆர்த்தடாக்ஸின் புனித சின்னமான எகிப்தின் மரியாளின் உருவத்திற்கு ஒத்ததாகவும் அந்த தாக்கத்துடனும் இருக்கிறது. அவளைப் போன்று மெலிந்த உடல் உருவத்துடன் உள்ளது. இதன் மூலம் அவர் மரியாளுக்கு தினசரி தேவதூதர்கள் வனாந்தரத்தில் உணவளித்தனர் என்ற மேற்கத்திய புராணங்களை புறக்கணித்தார்.

வரலாறு[தொகு]

இச்சிலை சம்பந்தமான ஆவணங்கள் அரிதானவை.புளோரன்ஸில் உள்ள தீக்கையிடத்தில் தென்மேற்கு சுவருக்கு எதிராக மீண்டும் சிலை வைக்கப்படுகிறது என்று 1500 ரில் குறிப்பிடப்பட்டுயிருக்கிறது. இதுவே இச்சிற்பத்தைப் பற்றிய முதல் குறிப்பாகும். பின்னர், சிலை ஒரு சில முறை மாற்றப்பட்டது:1688ல், இச்சிற்பத்திற்கு பதிலாக அவ்விடத்தில் திருமுழுக்குத் தொட்டி வைக்கப்பட்டு இது பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது. இது 1735ல் தீக்கையிடத்திற்கு கொண்டு வரப்பட்டு தென்கிழக்கு சுவருக்கு எதிராக வைக்கப்பட்டது.1912ஆம் ஆண்டில் இது தென்மேற்கு சுவருக்கு எதிராக வைக்கப்பட்டது. மறுசீரமைப்பிற்குப் பிறகு இன்று புளோரன்ஸ் நகரத்தில் உள்ள மியூஸோ டெல்' ஓ பெரா டெல் டியோமோவில் சலடெல்லா மடாலேனாவில் காணலாம்.