மந்திர குவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்திரக் குவளையில் சூடான நீர் ஊற்றும்போது ஏற்படும் நிறமாற்றம் குறித்த காணொளி
ஒரு விளம்பர மந்திர குவளை.

மந்திர குவளை (Magic mug) அல்லது) வெப்ப மாற்றுக் குவளை என்று அழைக்கப்படுவது ஒரு வகையான கோப்பை ஆகும். இந்தக் குவளையில் சூடான திரவம் நிரப்பப்படும்போது நிறம் மாறுகின்றது.[1] தெர்மோக்ரோமிக் மை பயன்படுத்துவதன் மூலம் இந்த விளைவு உருவாக்கப்படுகிறது.[2]

இந்த குவளைகள் பெரும்பாலும் நினைவு பொருளாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு குவளை இது விற்கப்படும் நகரம் அல்லது நினைவுச்சின்னத்தின் படத்தை வெளிப்படுத்தக்கூடும். வியாபார உத்தியாகவும் மேம்பாட்டு நடவடிக்கையாகவும் சில நிறுவனங்கள் சார்பாக இக்கோப்பைகள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த புகைப்படங்களையும் குவளைகளில் அச்சிடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திர_குவளை&oldid=3162717" இலிருந்து மீள்விக்கப்பட்டது