மந்திரச் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : ஆக்சாலிஸ் எஸ்குலேண்டா (Oxalis esculanta)

குடும்பம்  : ஆக்சாலிடேசியீ (Oxaliadaceae)

இதரப் பெயர்[தொகு]

அதிர்ஷ்டச் செடி (Luck Plant), நல்ல அதிர்ஷ்டச் செடி (Good Luck Plant)

செடியின் அமைவு[தொகு]

இது ஒரு சிறிய செடி ஆகும். இதனுடைய இலை புளிப்பு சுவை உடையது. இதனுடைய இலையின் எண்ணிக்கை வேறுபடுகிறது. முக்கோண வடிவ இலை, அடிப்பகுதி இளம் ஊதா சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாக உள்ளது. இரவு நேரங்களில் இவ்விலைகள் மூடி இருந்தால் சூனியக்காரியின் மந்திரத்தால் தான் இப்படி உள்ளதுஎன நம்பினர். 4 இலை உள்ள செடியை தேடி கண்டுபிடித்து எடுத்து வந்து வீடுகளில் வைத்தனர். இதுபோல் 3 இலை உள்ள செடியில் 4 இலை இருப்பதால் இதை மந்திரச்செடி என்றனர். ஆனால் இது உண்மையில் மண்ணில் சத்தை பொருத்து மாறுபடுகிறது. இலையில் நேராக பிளந்து நான்கு இலை உள்ளது. இதனுடைய பூ சிவந்த ரோஜா நிறத்திலும் மையப்பகுதி மஞ்சளாகவும் உள்ளது. இரவு நேரத்திலும், மோடமாக உள்ள சமயத்திலும் இப்பூ மூடிக்கொள்கிறது. இதனுடை காய் கிராம்பு போல் உள்ளதால் இதை கிளவர் செடி என்றும் அழைக்கிறார்கள். இது மெக்சிக்கோ பகுதியில் வாழ்கிறது. இச்செடியில் 400 இனச்செடிகள் உள்ளன.

உசாத்துணை[தொகு]

  • சிறிதும் - பெரியதும், அறிவியல் வெளியீடு, சூன் 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரச்_செடி&oldid=3837884" இலிருந்து மீள்விக்கப்பட்டது