உள்ளடக்கத்துக்குச் செல்

மந்தாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/பாவினியா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மந்தாரை
பிலிப்பீன்சின், மிண்டனாவோவில் காய்களைக் கொண்ட மரம்
ஆந்திரப் பிரதேசத்தில் பூக்கள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): பாவினியா
இனம்:
Template:Taxonomy/பாவினியாப. பர்பூரியா
இருசொற் பெயரீடு
ப பர்பூரியா
L.[1]
வேறு பெயர்கள் [1]
  • Bauhinia castrata Blanco
  • Bauhinia coromandeliana DC.
  • Bauhinia kurzii Prain
  • Bauhinia rosea Kurz
  • Bauhinia triandra Roxb.
  • Caspareopsis purpurea (L.) Pittier
  • Casparia castrata (Blanco) Hassk.
  • Perlebia purpurea (L.) A.Schmitz
  • Phanera kurzii (Prain) Thoth.
  • Phanera purpurea (L.) Benth.
  • Phanera rosea Rich. ex Teijsm. & Binn.
  • Telestria purpurea (L.) Raf.

மந்தாரை[2] (Bauhinia purpurea) என்பது இந்திய துணைக் கண்டத்தையும், மியான்மரையும் பூர்வீகமாகக் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரிக்ட் தொற்றுத் தாவர மலர்களை ஒத்திருப்பதால் இது ஆர்க்கிட் மரம்,[3] purple bauhinia,[3] camel's foot,[3] butterfly tree,[3] Hawaiian orchid tree என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது.

விளக்கம்

[தொகு]

மந்தாரை என்பது 5.2 மீட்டர் (17 அடி) உயரம் வரை வளரும் ஒரு சிறியது முதல் நடுத்தர அளவிலான இலையுதிர் மரமாகும். இதன் இலைகள் வட்டமாகவும் அடிப்பகுதியிலும் நுனியிலும் இரு மடல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். சுருக்கமாக கூறுவதென்றால் மாட்டுக் குளம்பு வடிவில் இதன் இலைகள் அமைந்திருக்கும். இந்த இலைகள் 10–20 சென்டிமீட்டர்கள் (4–8 அங்) நீள, அகலம் கொண்டவை. இதன் மலர்கள் கண்ணைக் கவரும், இளஞ்சிவப்பு நிறத்தில், ஐந்து இதழ்களைக் கொண்டவையாக இருக்கும். மலர்கள் நறுமணமுள்ளவை. இதன் காய்கள் 30 செ.மீ (12 அங்குலம்) நீளமுள்ள இருபுற வெடிக்கனி ஆகும். இந்தக் காய்களில் 12 முதல் 16 விதைகள் இருக்கும்.[4]

வேதியியல்

[தொகு]

மந்தாரையிலிருந்து பல்வேறு வகையான வேதிச் சேர்மங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 5,6-டைஹைட்ராக்சி-7-மெத்தாக்ஸிஃப்ளேவோன் 6-O-β-D-சைலோபைரனோசைடு, bis [3',4'-டைஹைட்ராக்ஸி-6-மெத்தாக்ஸி-7,8-ஃபுரானோ-5',6'-மோனோ-மெத்தில்அல்லாக்ஸி]-5-C-5-பைஃப்ளேவோனைல் , (4'-ஹைட்ராக்ஸி-7-மெத்தில் 3-C-α-L-ராம்னோபைரனோசைல்)-5-C-5-(4'-ஹைட்ராக்ஸி-7-மெத்தில்-3-C-α-D-குளுக்கோபைரனோசைல்) பயோஃப்ளேவோனாய்டு, பைபென்சைல்கள், டைபென்சோக்ஸெபின்கள், ஃபைட்டோல் கொழுப்பு எஸ்டர்களின் கலவை, லுடீன், β-சிட்டோஸ்டீரால், ஐசோகுவெர்சிடின் , அஸ்ட்ராகலின் ஆகியவை அடங்கும்.[சான்று தேவை]

பரவலும் வாழ்விடமும்

[தொகு]

இந்திய துணைக் கண்டத்தையும், மியான்மரையும் பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவர இனம் உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.[1]

அமெரிக்காவில் இம்மரம் ஹவாய், கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதிகள், தெற்கு டெக்சஸ், தென்மேற்கு புளோரிடா ஆகிய இடங்களில் வளர்கிறது. மந்தாரை பொதுவாக B. purpurea தாவரத்தின் தண்டுகளில் ஒட்டுகட்டுதல் மூலம் பெருக்கபடுகிறது.[சான்று தேவை]

பயன்கள்

[தொகு]

மந்தாரையின் இளம் இலைகளும், பூக்களும் உண்ணத்தக்கவை.[5] பிலிப்பைன்சில் இத்தாவரம், பி. பர்புரியா அலிபாங்பாங் (அதாவது "பட்டாம்பூச்சி") என்று அழைக்கப்படுகிறது.[6] இதன் இலைகள் சிட்ரஸ் பழங்கள் போன்ற புளிப்பு சுவையைக் கொண்டவை. பிலிப்பைன்ஸ் சமையலில் 'சினிஜாங்' போன்ற உணவுகளுக்குப் புளிப்புச் சுவை சேர்க்கவோ அல்லது ஊறுகாய் வகையாகவோ இவை பயன்படுத்தப்படுகின்றன.[7][8]

தென்கிழக்காசியா முழுவதும், வீக்கம், காயங்கள், கொப்புளங்கள், புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பற்றுக்கட்டுகளைத் தயாரிப்பதில் இதுவும் இது சார்ந்த இனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாவரத்தின் பல்வேறு பாகங்கள், காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்கும் கஷாயங்களிலும், துவர்ப்பியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[5]

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில், இதன் இலைகள் இருமலுக்கு மருந்தாகவும், மரப்பட்டைகள் சுரப்பி தொடர்பான நோய்களுக்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பூக்கள் ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் பயன்படுத்தப்படுவதோடு, மலமிளக்கியாகவும் கருதப்படுகிறது .[5]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Bauhinia purpurea L." Plants of the World Online. Royal Botanic Gardens, Kew. Retrieved 2020-05-27.
  2. ↑ வள்ளியப்பன், ஆதி (2025-12-13). "சோழர்களின் குடிப்பூவைத் தேடி... | ஆயிரம் மலர்களே மலருங்கள் 15". Hindu Tamil Thisai. Retrieved 2026-10-04.
  3. 1 2 3 4 "Bauhinia purpurea L. GRIN-Global". npgsweb.ars-grin.gov (in ஆங்கிலம்). Archived from the original on 2025-04-14. Retrieved 2025-12-04.
  4. ↑ Mu, Weixue; Darian, Joshua Casey; Sung, Wing-Kin; Guo, Xing; Yang, Tuo; Tang, Mandy Wai Man; Chen, Ziqiang; Tong, Steve Kwan Hok et al. (2025-01-01). "The haplotype-resolved T2T genome for Bauhinia × blakeana sheds light on the genetic basis of flower heterosis". GigaScience 14. doi:10.1093/gigascience/giaf044. பன்னாட்டுத் தர தொடர் எண்:2047-217X. பப்மெட்:40276955. பப்மெட் சென்ட்ரல்:12012898. https://doi.org/10.1093/gigascience/giaf044.
  5. 1 2 3 "Bauhinia purpurea" (PDF). Agroforestree database. World Agroforestry Centre. Retrieved 26 November 2019.
  6. ↑ Merrill, Elmer Drew (1903). A dictionary of the plant names of the Philippine Islands. Manila: Bureau of Public Printing, Department of The Interior. p. 128 – via University of Michigan Digital Collections.
  7. ↑ "Alibangbang / Malabar Bauhinia". Market Manila. 7 August 2006. Retrieved 26 November 2019.
  8. ↑ Seidemann, Johannes (2005). World Spice Plants. Berlin, Heidelberg: Springer-Verlag Berlin Heidelberg. p. 64. ISBN 9783540279082.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தாரை&oldid=4682290" இலிருந்து மீள்விக்கப்பட்டது