மந்தர்தேவி கோயில் நெரிசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மந்தர்தேவி கோயில் நெரிசல் (Mandher Devi temple stampede) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் சாத்தாரா மாவட்டத்தில் வய் அருகே உள்ள மந்தர்தேவி கோயிலில் 2005 சனவரி 25 செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட ஒரு நெரிசலாகும். சாகம்பரி பூர்ணிமாவின் பௌர்ணமி நாளில் வருடாந்த யாத்திரை மேற்கொள்வதற்காக மந்தர்தேவி கோயிலில் 300,000 பேர் ஒன்றுகூடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது. [1] பக்தர்கள் இந்தக் கோயிலின் தெய்வத்திற்கு மிருக பலி அளிப்பதோடு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மங்கிர்பாபா கோவிலில் தேங்காய்களை உடைத்து, கலுபாய் தேவியின் சிலையுடன் நடனமாடுவதும் அடங்கும்.

கலுபாய் தெய்வத்திற்கு பிரசாதமாக உடைக்கப்பட்ட தேங்காய் தண்ணீரினால் சில பக்தர்கள் கோயிலின் செங்குத்தான கல் படிகளில் தவறி விழுந்தனர் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பின்னர் அருகிலுள்ள கடைகளில் தீ விபத்தும் ஏற்பட்டது. எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தன. கோயிலுக்குச் செல்லும் செங்குத்தான மற்றும் குறுகிய மலைப்பாதையில் பலர் நசுக்கப்பட்டனர். மேலும் பலர் தீயில் எரிந்தனர். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் கோச்சர் என்பவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, குடிபோதையில் சிலர் குழப்பத்தை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நெரிசலில் 291 பக்தர்கள் இறந்தனர். [2] [3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]