உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
வகைஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1953
சார்புஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்; அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்
தலைவர்இந்தியப் பிரதமர்
பணிப்பாளர்பிசி. பன்ஞ்சாரியா[1]
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்www.ceeri.res.in

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Electronics Engineering Research Institute) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் பிலானி, ஜுன்ஜுனு மாவட்டம் மற்றும் தமிழ்நாடு, சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளது ஆராய்ச்சி நிறுவனமாகும். இது புது தில்லி, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஆய்வகமாகும். இது மின்னணு துறையில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 1953-ல் நிறுவப்பட்டது.[2]

இந்நிறுவனம் தொடக்கத்திலிருந்து, நாட்டில் மின்னணுவியல் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. பின்வரும் முக்கிய பிரிவுகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டினை மேற்கொள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த மனிதவளத்தை நிறுவியுள்ளது.

  1. கணினி இயற்பியல் அமைப்புகள்
  2. நுண்ணலைக் குழாய்கள்
  3. திறணுணர்வி

சென்னை மையம் செயல்முறை கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் தானியக்கம் மற்றும் இயந்திர பார்வை தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Director". 14 July 2020. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  2. "About CSIR-CEERI". CSIR-Central Electronics Engineering Research Institute. Archived from the original on 2019-09-02. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20.