மத்திய பப்புவா
மத்திய பப்புவா
Central Papua | |
---|---|
Province of Central Papua Provinsi Papua Tengah | |
![]() திமிக்கா நகரம் | |
ஆள்கூறுகள்: 4°46′S 137°48′E / 4.767°S 137.800°E | |
நாடு | ![]() |
பகுதி | ![]() |
மாநிலம் | மத்திய பப்புவா |
நிறுவல் | 25 சூலை 2022 |
தலைநகரம் | நபிர்[1] |
பெரிய நகரம் | திமிக்கா, மிமிக்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 61,072.91 km2 (23,580.38 sq mi) |
உயர் புள்ளி | 4,884 m (16,024 ft) |
மக்கள்தொகை (2024 மதிப்பீடு)[3] | |
• மொத்தம் | 14,72,910 |
• அடர்த்தி | 24/km2 (62/sq mi) |
மக்கள் தொகை | |
• இனக்குழுக்கள்[4] | அமுங், டமால், எகாரி, கமோரோ, லானி, மோனி, வோலானி, யவுர் (பூர்வீகம்), ஜாவானியர், வேறு |
• சமயம் (2023)[5] | கிறிஸ்தவம் 87.89% –சீர்திருத்தம் 68.52% –கத்தோலிக்கம் 19.37% இசுலாம் 12.00% இந்து 0.07% பௌத்தம் 0.03% வேறு 0.01% |
• மொழிகள் | ஜாவானியம், பப்புவா மலாய், வேறு |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +9 |
HDI (2024) | ![]() |
- வளர்ச்சி[7] | ![]() மத்திமம் [8] |
இணையதளம் | papuatengahprov |
மத்திய பப்புவா மாநிலம் (இந்தோனேசியம்: Provinsi Papua Tengah; ஆங்கிலம்: Province of Central Papua) என்பது நியூ கினி தீவில்; இந்தோனேசியா, மேற்கு நியூ கினியின், தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்.[9][10] மேற்கு நியூ கினி நிலப் பகுதி இந்தோனேசிய நியூ கினி அல்லது இந்தோனேசிய பப்புவா என்றும் அழைக்கப்படுகிறது.
பப்புவா மாநிலத்தின் முன்னாள் எட்டு பகுதிகளில் இருந்து சூலை 25, 2022 அன்று இந்த மாநிலம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
இந்த மாநிலம் 61,072.91 கிமீ2 பரப்பளவைக் கொண்டது; மற்றும் 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதன் மக்கள் தொகை அதிகாரப்பூர்வ மதிப்பீடு 1,472,910 ஆக இருந்தது (784,670 ஆண்கள் மற்றும் 688,240 பெண்கள்).[3]
நிலவியல்
[தொகு]இந்த மாநிலத்தின் மேற்கில் மேற்கு பப்புவா; வடக்கு மற்றும் வடகிழக்கில் பப்புவா மாநிலம்; கிழக்கில் மேல்நில பப்புவா; தென்கிழக்கில் தெற்கு பப்புவா ஆகிய இந்தோனேசிய மாநிலங்கள், நில எல்லைகளாக அமைகின்றன.
மாநிலத்தின் தலைநகரம் நபிர்; நபிர் பிராந்தியத்தின் (Nabire Regency) வாங்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இருப்பினும் மிமிக்கா பிராந்தியத்தில், திமிக்கா (Timika) நகரம்தான் மிகப்பெரிய நகரம் என அறியப்படுகிறது.
தெலுக் சந்திரவாசி தேசியப் பூங்கா
[தொகு]மத்திய பப்புவா மாநிலம், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடல்களால் சூழப்பட்டுள்ளது. நபிர் நகரம், மத்திய பப்புவாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள மத்திய பப்புவா மாநிலம், தெலுக் சந்திரவாசி தேசியப் பூங்காவிற்கு (Teluk Cenderawasih National Park) மிக அருகில் உள்ளது.
இந்த பூங்கா பவளப்பாறைகள், வெள்ளை மணல் தீவுகள் மற்றும் திமிங்கலச் சுறாக்களுக்குப் பெயர் பெற்றது. கடல் சுற்றுலாவிற்கு மிகச் சிறந்த இடம் என்றும் அறியப்படுகிறது. மத்திய பப்புவாவின் தெற்குப் பகுதி பெரும்பாலும் சதுப்பு நிலப்பகுதியாக உள்ளது.
அதன் மத்தியப் பகுதியில், இந்தோனேசியாவின் மிக உயரமான புன்சாக் ஜெயா மலை உள்ளது. அத்துடன், ஜெயவிஜயா மலைகளால் (Jayawijaya Mountains) ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த மலைத் தொடரில்தான் கிராஸ்பெர்க் தங்கச் சுரங்கம் (Grasberg mine) உள்ளது.[11][12]
மத்திய பப்புவா மாநில பிராந்தியங்கள்
[தொகு]
மத்திய பப்புவா மாநிலம் 8 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது.
- டெய்யாய் பிராந்தியம் (Deiyai Regency)
- டோகியாய் பிராந்தியம் (Dogiyai Regency)
- இந்தான் ஜெயா பிராந்தியம் (Intan Jaya Regency)
- மிமிக்கா பிராந்தியம் (Mimika Regency)
- நபிர் பிராந்தியம் (Nabire Regency)
- பணியாய் பிராந்தியம் (Paniai Regency)
- புஞ்சாக் பிராந்தியம் (Puncak Regency)
- புஞ்சாக் ஜெயா பிராந்தியம் (Puncak Jaya Regency)
நியூ கினி
[தொகு]நியூ கினி என்பது ஒரு தீவு; உலகின் இரண்டாவது பெரிய தீவு.
- நியூ கினி தீவின் மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் 6 மாநிலங்கள் உள்ளன.
- நியூ கினி தீவின் கிழக்குப் பகுதியில் பப்புவா நியூ கினி எனும் தனி ஒரு நாடு உள்ளது. 1975-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற ஒரு தனி நாடானது.
காட்சியகம்
[தொகு]- மத்திய பப்புவா காட்சிப் படங்கள்
பொதுவகத்தில் Central Papua தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pembentukan Tiga Provinsi Baru di Papua". setkab.go.id. 20 August 2022. Retrieved 28 June 2024.
- ↑ Setyaningrum, Puspasari (2022-07-02). "Profil Provinsi Papua Tengah". KOMPAS.com. Retrieved 2022-09-11.
- ↑ 3.0 3.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Papua Tengah Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.94)
- ↑ Ananta, Aris; Arifin, Evi Nurvidya; Hasbullah, M Sairi; Handayani, Nur Budi; Pramono, Agus (2015). Demography of Indonesia's Ethnicity. Institute of Southeast Asian Studies. ISBN 978-981-4519-87-8. P. 102.
- ↑ "Visualisasi Data Kependudukan - Kementerian Dalam Negeri 2024" (Visual). www.dukcapil.kemendagri.go.id (in இந்தோனேஷியன்). Retrieved 25 July 2024.
- ↑ "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ "Indeks Pembangunan Manusia (Umur Harapan Hidup Hasil Long Form SP2020), 2023-2024". www.bps.go.id. Badan Pusat Statistik. 15 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ Santoso, Bangun; Ardiansyah, Novian (2022-06-30). "DPR Sahkan RUU DOB, Papua Kini Punya 3 Provinsi Baru: Papua Selatan, Papua Tengah Dan Papua Pegunungan". suara.com (in இந்தோனேஷியன்). Retrieved 2022-07-01.
- ↑ Utama, Felldy (2022-06-30). "Usai RUU DOB Papua Disahkan, Ini Perintah Mendagri Buat Bupati Papua Selatan : Okezone Nasional". Nasional Okezone. iNews. Jakarta: Okezone. Retrieved 2022-07-01.
- ↑ How much gold is there left to mine in the world?
- ↑ "Grasberg Open Pit, Indonesia". Mining Technology. Retrieved 16 October 2017.
சான்றுகள்
[தொகு]- L, Klemen (2000). "Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942".
- Lumintang, Onnie; Haryono, P. Suryo; Gunawan, Restu; Nurhajarini, Dwi Ratna (1997). Biografi Pahlawan Nasional Marthin Indey dan Silas Papare (PDF). Indonesia: Ministry of Education and Culture (Indonesia).
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Central Papua தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.