உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய தாய்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய தாய்லாந்து
Central Thailand
ภาคกลาง
Dvaravati
தாய்லாந்தின் மத்திய பகுதி
தாய்லாந்தின் மத்திய பகுதி
மிகப்பெரிய நகரம்பேங்காக்
மாகாணங்கள்
பரப்பளவு
 • மொத்தம்91,798.64 km2 (35,443.65 sq mi)
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்2,08,44,000
 • அடர்த்தி230/km2 (590/sq mi)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு, 2024)
 • மெட்ரோ฿9.711 திரில்லியன்
(US$275.798 பில்லியன்)
 • தனிநபர்฿465,890 (US$13,231)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7

மத்திய தாய்லாந்து அல்லது சயாம்; துவாரவதி (ஆங்கிலம்: Central Thailand; Siam, Siam proper, Dvaravati; தாய்: ภาคกลาง) என்பது தாய்லாந்தின் நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்த நிலப்பகுதி சாவோ பிரயா ஆற்றின் பரந்த வண்டல் சமவெளியை உள்ளடக்கியது. தாய்லாந்து மத்திய சமவெளியில் அமைந்துள்ள இந்த நிலப்பகுதி, பெட்சாபூன் மலைகளால் (Phetchabun Mountains) வடகிழக்கு தாய்லாந்திலிருந்து (ஈசான்) பிரிக்கப்பட்டு உள்ளது.

மேற்கில் தெனாசிரிம் மலைத்தொடர்[4]; மத்திய தாய்லாந்தை மியான்மரிலிருந்து பிரிக்கிறது. வடக்கில் வடக்குத் தாய்லாந்தின் மலைத் தொடர்களுள் ஒன்றான பி பான் நாம் மலைத்தொடரால்[5] (Phi Pan Nam Range) சூழப்பட்டுள்ளது. இப்பகுதி அயூத்தியா பேரரசின் (சயாம்) மையப்பகுதியாக விளங்கியது. மேலும் உலகின் மிக முதன்மையான நகரமான பேங்காக்கைத் தனனகத்தே கொண்டுள்ளதால், இன்றும் இது தாய்லாந்தில் ஆதிக்கம் செலுத்தும் முதன்மை நிலப்பகுதியாகத் திகழ்கிறது.

விளக்கம்

[தொகு]

தாய்லாந்தின் மாகாணங்களை நிலப்பகுதிகளாகப் பிரிப்பதில் இரண்டு முக்கிய விதிகள் பின்பற்றப் படுகின்றன. அதன்படி தாய்லாந்து நான்கு அல்லது ஆறு நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. புவியியல் ஆய்வுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆறு நிலப்பகுதிகள் கொண்ட அமைப்பில், மத்திய தாய்லாந்து வடக்கே சுக்கோதாய் (Sukhothai) மற்றும் பித்சானுலோக் (Phitsanulok) மாகாணங்கள் முதல் தெற்கே தாய்லாந்து வளைகுடாவை எல்லையாகக் கொண்ட மாகாணங்கள் வரை பரவியுள்ளது.

இதில் மேற்கே மியான்மரை எல்லையாகக் கொண்ட மலைப்பாங்கான மாகாணங்களும், கிழக்கின் கடலோர மாகாணங்களும் விலக்கப்பட்டுள்ளன. நான்கு நிலப்பகுதிகள் கொண்ட அமைப்போ வடக்கே சாய் நாட் மாகாணம், சிங் புரி மாகாணம் மற்றும் லோப்புரி மாகாணம் ஆகிய மாகாணங்கள் வரை மட்டுமே உள்ளடக்குகிறது; அத்துடன், மேற்கு மற்றும் கிழக்கே முறையே மியான்மர் மற்றும் கம்போடியாவின் எல்லைகள் வரையிலும் பரவியுள்ளது.

2019-ஆம் ஆண்டில் தாய்லாந்து அரச வனத்துறையால் வரையறுக்கப்பட்டபடி, மத்திய நிலப்பகுதியானது 18 மாகாணங்களைக் கொண்டுள்ளது (பெருநகர பேங்காக்கின் 7 மாகாணங்கள்; தெற்கு மத்திய தாய்லாந்தின் 8 மாகாணங்கள்; மற்றும் மேற்கு தாய்லாந்தின் 3 மாகாணங்கள்). இந்த மத்திய நிலப்பகுதியின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 67,473 சதுர கிமீ ஆகும். அதே வேளையில் மொத்தக் காடுகளின் பரப்பளவு 22,374 சதுர கிமீ; அல்லது மத்திய நிலப்பகுதிப் பரப்பளவில் 33.2 விழுக்காடு ஆகும்.[6]

நிருவாகம்

[தொகு]

நவீன தாய்லாந்தை வெவ்வேறு நிலப்பகுதிகளாகப் பிரிப்பதற்குப் பல்வகையான கூறுகள் பயன்படுத்தப் படுகின்றன. அந்த வகையில் அந்தக் கூறுகள் மத்திய தாய்லாந்திற்குச் சற்றே மாறுபட்ட எல்லைகளை வழங்குகின்றன. புவியியல் ரீதியான ஆறு நிலப்பகுதிகள் கொண்ட அமைப்பில், மத்திய நிலப்பகுதியானது மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பின்வரும் 22 மாகாணங்களை உள்ளடக்குகிறது:

  • பெருநகர பேங்காக்

பேங்காக், நக்கோன் பாத்தோம், நொந்தபுரி, பத்தும் தானி, சமுத் பிரகான், சமுத் சகோன், சமுத் சோங்கராம்

  • வடக்கு மத்திய தாய்லாந்து நிலப்பகுதி

காம்யெங் பெட், நக்கோன் சவான், பெட்சாபுன், பிச்சித், பித்சானுலோக், சுகோத்தாய், உத்தாய் தானி

  • தெற்கு மத்திய தாய்லாந்து நிலப்பகுதி

ஆங் தோங், அயூத்தியா, சாய் நாட், லோப்புரி, நக்கோன் நாயோக், சாராபுரி, சிங் புரி, சுபன் புரி

பொருளாதாரம்

[தொகு]

2018 நிதி ஆண்டிற்கான தரவுகளின்படி, மத்திய நிலப்பகுதியானது ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தியாக 863.328 பில்லியன் பாட் (27.85 பில்லியன் அமெரிக்க டாலர்) அல்லது தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.3 விழுக்காட்டைக் கொண்டிருந்தது.

அயூத்தியா மாகாணம் ฿412.701 பில்லியன்; (US$13.3 பில்லியன்) பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தது. இது ฿454,953; (US$14,676) தலா மொத்த மாகாண உற்பத்திக்கு நிகரானது; இது தரவரிசையில் அதற்கு அடுத்தபடியாக இருக்கும் சராபுரி மாகாணத்தை விட 40 விழுக்காடு அதிகமாகும்; மற்றும் தரவரிசையில் அதற்கு அடுத்து வரும் மற்ற அனைத்து மாகாணங்களை விட மூன்று மடங்கு அதிகமாகும்.[7]

மொத்த மாகாண உற்பத்தி (GPP)
தரவரிசை மாகாணம் மொத்த மாகாண உற்பத்தி
(மில்லியன் பாட்)
மக்கள் தொகை
(x 1000)
மொத்த மாகாண உற்பத்தி தனிநபர் (பாட்)
1அயூத்தியா412,701907454,953
2சாராபுரி246,063758324,820
3சிங் புரி27,783190145,899
4லோப்புரி110,962777142,741
5ஆங் தோங்30,539250122,159
6சாய் நாட்35,280294119,850
 மத்திய மண்டலம்863,3283,177271,759

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Table 2 Forest area Separate province year 2019". Retrieved 6 April 2021.
  2. ↑ รายงานสถิติจำนวนประชากรและบ้านประจำปี พ.ส.2562 [Statistics, population and house statistics for the year 2019]. Registration Office Department of the Interior, Ministry of the Interior. stat.bora.dopa.go.th (in தாய்). 31 December 2019. Archived from the original on 14 June 2019. Retrieved 26 February 2020.
  3. ↑ "Gross Regional and Provincial Product, 2024 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/en/?p=107927&ddl=107925.
  4. ↑ Praphon Rueannarong (2013). จดหมายจากครูยูโซะ เล่าเรื่องภาษามลายูในภาษาไทย (in தாய்). Bangkok: Sathapohn. p. 71.
  5. ↑ Thai Society for the Conservation of Wild Animals - Thai Forests; Geography of Thailand
  6. ↑ "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in தாய்). 2019. Retrieved 6 April 2021.
  7. ↑ Phitsanulok Provincial Statistical Report 2562-2019: Economic Statistics - National Accounts. Phitsanulok Provincial Statistical Office (Report). National Statistical Office (NSO). 2020. p. 93. ISSN 1905-8314.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமூலத்தில் Central (Thailand மத்திய தாய்லாந்து) பற்றிய ஆக்கங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_தாய்லாந்து&oldid=4655645" இலிருந்து மீள்விக்கப்பட்டது