மத்திய சாலை ஆய்வு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயக்கர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Road Research Institute) 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு பற்றி பல்வேறு ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் இந்தநிறுவனம் மேற் கொண்டு வருகிறது. நடுவன் அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு அங்கமாக இது விளங்குகிறது. கீழ்கண்ட பணிகள் சம்மந்தமான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் இந்த நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது:

  1. விமான ஒடு பாதை/ சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு
  2. நடுத்தர / பெரு நகரங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டங்கள்
  3. சமவெளி, மலைப்பகுதி போன்ற வெவ்வேறு நில சாலைகளின் மேலாண்மை.
  4. தரம் குன்றிய கட்டுமான பொருட்களின் மேம்பாடு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]