உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய கால அசிரியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய கால அசிரியப் பேரரசு
Aššūrāyu
கிமு 1392–கிமு 934
பண்டைய அண்மை கிழக்கில் கிமு 1392ல் மத்திய அசிரியப் பேரரசின் வரைபடம் (ஆரஞ்ச் நிறம்)
பண்டைய அண்மை கிழக்கில் கிமு 1392ல் மத்திய அசிரியப் பேரரசின் வரைபடம் (ஆரஞ்ச் நிறம்)
தலைநகரம்நிம்ருத், அசூர்
பேசப்படும் மொழிகள்அக்காதியம்
சமயம்
பண்டைய மெசொப்பொத்தேமியா சமயங்கள்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கிமு 1365 — 1330
அசூர் - உபாலித் (முதல்)
• கிமு 967 — 934
இரண்டாம் திக்லத் - பிலேசர் (இறுதி)
வரலாற்று சகாப்தம்செப்புக் காலம்
கிமு 1392
• முதலாம் அசூர் - உபாலித் முடிசூட்டுக்கொள்ளுதல்
கிமு 1365
• இரண்டாம் அசூர் தன்
கிமு 934
முந்தையது
பின்னையது
பழைய அசிரியப் பேரரசு
மித்தானி இராச்சியம்
புது அசிரியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் சிரியா

 ஈரான்  ஈராக்

 துருக்கி

மத்திய கால அசிரியப் பேரரசு (Middle Assyrian Empire), பழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், மத்திய கால அசிரியப் பேரரசு, தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். இப்பேரரசு மித்தான்னிப் பேரரசிலிருந்து தன்னாட்சியுடன் ஆண்டது. இப்பேரரசின் தலைநகரங்களாக நிம்ருத் மற்றும் அசூர் நகரங்கள் இருந்தன.

மத்திய கால அசிரியப் பேரரசும், விரிவாக்கமும் கிமு 1392–1056

[தொகு]

மத்திய அசிரியப் பேரரசர் முதலாம் எரிபா-அதாத் (கிமு 1392–1366), அசிரியர்கள் மீது மித்தான்னி பேரரசின் தாக்கம் அதிகம் கொண்டிருந்தது. பேரரசர் முதலாம் அசூர்-உபாலித் (கிமு 1365–1330) ஆட்சியில், மத்திய அசிரியப் பேரரசு அதிக வலுடன் விளங்கியது.

இப்பேரரசின் சம காலத்தில் இருந்த மித்தானி இராச்சியத்தின் மீது , அசிரியர்கள் தென்கிழக்கிலிருந்தும், இட்டைட்டுகள் வடமேற்கிலிருந்தும் அழுத்தம் தந்ததால், மித்தானிப் பேரரசின் பலம் வீழ்ச்சி கண்டது. அசிரியா மன்னர் முதலாம் அசூர்-உபாலித், மித்தானிப் பேரரசர் இரண்டாம் சுத்தார்னாவை ஒரு போர்க்களத்தில் சூழ்ச்சி செய்து வீழ்த்தி, அசிரியாவை சக்தி மிக்க பேரரசு ஆனது. அசிரியப் பேரரசர் என்லில் நிராரி (கிமு 1329–1308) ஆட்சியில் பாபிலோனை கைப்பற்றினார். அசிரியப் பேரரசர் ஆரிக்- டென் -இலி (கிமு 1307–1296) சிரியாவைக் கைப்பற்றினார்.

முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275) ஆட்சியில், நிம்ருத் நகரம் அசிரியப் பேரரசின் தலைநகரானது. மேலும் இட்டைட்டுப் பேரரசின் பகுதிகளையும், ஆசிய மைனரையும் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். அசூர் நகரத்தில் அசிரிய தெய்வஙகளுக்கான கோயில்களும், அரண்மனைகளும் கட்டப்பட்டது.

முதலாம் சால்மனேசர் (கிமு 1274–1244) ஆட்சியில் கிமு 1274ல் உரார்த்துகளின் உரியன் இராச்சியத்தை கைப்பற்றினார். பின்னர் மித்தான்னிப் பேரரசையும் முழுவதுமாக வீழ்த்தினார்.

இட்டைட்டு பேரரசு மற்றும் எகிப்து இராச்சியத்திற்கும், அசிரியப் பேரரசு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.[1] அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207), மீண்டும் இட்டைட்டுகளையும், பாபிலோனியர்களையும் வென்றார்.[2]

செப்புக் காலத்தின் அசிரியப் பேரரசின் குலைவு, கிமு 1055–934

[தொகு]
அசிரியக் குதிரை வீரர்கள், அரேபியர்களை வீழ்த்துதல்

செப்புக் காலத்தில் மக்கள் எழுச்சியால் கிமு 1200 - 900 கால வரையிலான பண்டைய அண்மை கிழக்கு, வட ஆப்பிரிக்கா, அனத்தோலியா, காகசஸ், பால்கன் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகள், ஆளும் வர்க்கத்தினருக்கு இருண்ட காலமாக அமைந்தது. கிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு அசிரியாவை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது.

போர்க்களத்திலிருந்து வெற்றியுடன் திரும்பும் அசிரிய வீரர்கள்
உயிருடன் எதிரிகளின் தோலை உரிக்கும் அசிரிய வீரர்கள்

மத்திய கால அசிரியப் பேரரசர்கள்

[தொகு]
  1. எரிபா - அதாத் (கிமு 1392–1366 )
  2. முதலாம் அசூர் - உபாலி (கிமு 1365–1330 )
  3. எனில் - நிராரி (கிமு 1329–1308 )
  4. அரிக் - டென் - இல்லி (கிமு 1307–1296 )
  5. முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275 )
  6. முதலாம் சல்மேனசர் (கிமு 1274 – 1244 )
  7. துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207 )
  8. அசூர் - நடின் - அப்தி (கிமு 1206–1203 )
  9. மூன்றாம் அசூர் - நிராரி (கிமு 1202–1197 )
  10. எனில் - குடுரி - உசூர் (கிமு 1196–1193 )
  11. நினுர்தா - அபல் - இகூர் (கிமு 1192–1180 )
  12. முதலாம் அசூர் - தன் (கிமு 1179–1133)
  13. முதலாம் அசூர் Ashur-resh-ishi I (கிமு 1133–1116 )
  14. முதலாம் திக்லத் - பிலேசர் (கிமு 1115–1077)
  15. அசாரித் - அபல் - இகூர் (கிமு 1076–1074)
  16. அசூர் - பெல் - காலா (கிமு 1073–1056 )
  17. நான்காம் சாம்சி - அதாத் (கிமு 1053–1050)
  18. முதலாம் அசூர்நசிர்பால் (கிமு 1049–1031)
  19. இரண்டாம் சல்மனேசர் (கிமு 1030–1019)
  20. இரண்டாம் அசூர் - ரப்பி (கிமு 1013–972 )
  21. இரண்டாம் அசூர் - இசி (கிமு 971–968)
  22. இரண்டாம் திக்லத் - பிலேசர் (கிமு 967–936)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Georges Roux (1964), Ancient Iraq, p. 263.
  2. J. M. Munn-Rankin (1975). "Assyrian Military Power, 1300–1200 B.C.". In I. E. S. Edwards (ed.). Cambridge Ancient History, Volume 2, Part 2, History of the Middle East and the Aegean Region, c. 1380–1000 BC. Cambridge University Press. pp. 287–288, 298.