உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்
ரூக்கி வளாகம்
உருவாக்கம்1947
இயக்குநர்பிரதீப் குமார் இராமன்சர்லா
அமைவிடம்
29°51′55″N 77°54′08″E / 29.86534°N 77.90232°E / 29.86534; 77.90232
இணையதளம்www.cbri.res.in

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (Central Building Research Institute) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் ரூர்க்கியில் அமைந்துள்ளது. இந்தியாவில் "கட்டட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், ஊக்குவித்தல்" ஆகியவற்றிற்கு பொறுப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் ஓர் அங்கமாகும்.[1]

1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கட்டடக் கட்டுமானம் மற்றும் கட்டுமானப் பொருள் தொழில்களுக்கு கட்டடப் பொருட்கள், சுகாதார கண்காணிப்பு மற்றும் கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு, பேரழிவு தணிப்பு, தீ பாதுகாப்பு, எரிசக்தி திறமையான கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகள் ஆகியவற்றின் பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில், பொருத்தமான மற்றும் சிக்கனமான தீர்வுகளைக் கண்டறிவதில் நிறுவனம் உதவுகிறது. வளர்ச்சிச் செயல்பாட்டில் ஆய்வு மேம்பாடு மூலம் மக்களுக்கு சேவை செய்ய இந்நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதற்காகப் பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் இணைப்புகளைப் பராமரிக்கிறது.

ஆய்வு மேம்பாட்டுப் பிரிவுகள்

[தொகு]
  • மேம்பட்ட கான்கிரீட், எஃகு & கலவைகள்
  • கட்டிடக்கலை திட்டமிடல் & ஆற்றல் திறன்
  • கட்டுமானப் பொருட்கள் & சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
  • கட்டுமான தானியக்கம் & ரோபாட்டிக்சு
  • தீ தடுப்பு தொழினுட்பம்
  • புவித்தொழினுட்ப பொறியியல் & புவி அபாயங்கள்
  • பாரம்பரியம் மற்றும் சிறப்பு கட்டமைப்புகள்
  • கட்டமைப்பு பொறியியல்

இயக்குநர்கள்

[தொகு]
  • பிரதீப் குமார் இராமன்சர்லா நவம்பர் 2022 - முதல்[2]
  • என். கோபாலகிருஷ்ணன்:
  • கிரிசு சாகனி: ஆகத்து 2015 – திசம்பர் 2015
  • எசு. கே. பட்டாச்சார்யா: 2009–2015
  • கணேஷ் பாபு கோடெபோயின: 2005 - 2007
  • வி. கே. மாத்தூர்: 2000–2005
  • ஆர். என். ஐயங்கார்: 1994–2000

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "About Institute". Retrieved 29 November 2022.
  2. ↑ "Director's Profile". CSIR-Central Building Research Institute (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-29.

வெளியிணைப்புகள்

[தொகு]