உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR - CPRI) Central potato Research Institute: மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில் அமைந்துள்ளது. இந்தியாவின் பொது இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். இது இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் மருத்துவர். பிரஜேஷ் சிங் ஆவார்.[1]

வரலாறு

[தொகு]

உருளைக்கிழங்கு வகைகளை உருவாக்குதல் உருளைக்கிழங்கு சாகுபடியை விரிவுபடுத்துதல் மற்றும் உள்ளுர் நிலைமைகளுக்கு ஏற்ற சாகுபடி நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய அரசின் அப்போதைய ஆலோசகர் சர் ஹெர்பர்ட் ஸ்டீவர்டின் பரிந்துறையின் பேரில் ஆகஸ்ட் 1949 இல் பீகாரின் பாட்னாவில் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. 1956 ஆம் ஆண்டு உருளைக்கிழங்கு உற்பத்தியில் கலப்பின பணிகளை எளிதாக்குவதற்கும் விதை உருளைக்கிழங்கின் தரத்தை[2]<ref>"Central Potato Research Institute". ARCH-India (in ஆங்கிலம்). Retrieved 2023-06-15. பராமரிப்பதற்கும் இந்த நிறுவனம் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. மேலும் இது ஏப்ரல் மாதம் 1966 இல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மாற்றப்பட்டது. [2] பராமரிப்பதற்கும் இந்த நிறுவனம் இலாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது.

பிராந்திய நிலையங்கள்

[தொகு]
  • பிராந்திய நிலையம், மோடிபுரம் மீரட், (உ.பி)
  • பிராந்திய நிலையம், சலந்தர், (பஞ்சாப்)
  • பிராந்திய நிலையம், பாட்னா, (பீகார்)
  • பிராந்திய நிலையம், குவாலியர் (ம. பி)
  • பிராந்திய நிலையம், சில்லாங், (மேகாலயா)
  • பிராந்திய நிலையம், ஊ்ட்டி, (தமிழ்நாடு)
  • பிராந்திய நிலையம், குஃப்ரி-ஃபாகு பிரிவு, (சிம்லா எச்.பி)
  • பிராந்திய நிலையம், ராஜ்குரு நகர் புனே, (மகாராட்டிரம்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Present Director". ICAR-CPRI Shimla.
  2. 2.0 2.1 "About ICAR-CPRI Shimla". ICAR-CPRI. Retrieved 15 June 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]