மத்தியச் சந்தை இலகுத் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 KJ14  SBK16 
Pasar Seni station
Stesen Pasar Seni
中央艺术坊站
மத்திய சந்தை
கெலனா ஜெயா தட இலகு தொடருந்து நிலையம்
Pasar Seni LRT.jpg
இடம்மத்திய சந்தையை அடுத்து
உரிமம்இசுயாரிகத் பிராசாரண நகர பெர்ஹாடு - இயக்கம் இராபிடு கேஎல்
தடங்கள்கெலனா ஜெயா தடம் (1998 முதல் இன்றுவரை)
நடைமேடை1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்இல்லை
வரலாறு
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 1, 1998

பசார் செனி எல்ஆர்டி நிலையம் (Pasar Seni station) அல்லது மத்தியச் சந்தை இலகுத் தொடருந்து நிலையம் கோலாலம்பூரில் கெலனா ஜெயா தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுத் தொடருந்து நிலையமாகும். மத்திய சந்தை மலாய் மொழியில் பசார் செனி என அழைக்கப்படுவதால் இந்த தொடருந்து நிலையத்திற்கும் அப்பெயரே சூட்டப்பட்டுள்ளது.

கெலனா ஜெயா தடம் செப்டம்பர் 1, 1998இல் சுபாங் டெபோவிற்கும் பசார் செனி நிலையத்திற்கும் இடையே துவங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1999இல் பசார் செனி நிலையத்திலிருந்து புத்ரா முனையத்திற்கு விரிவாக்கப்பட்டது. புத்ரா முனையம் தற்போது கோம்பாக் நிலையம் என அறியப்படுகின்றது.

இந்த தொடருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் தொடருந்து நிலையம் 400 மீட்டர் தொலைவில் நடைத்தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் முதன்மையான பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன.