உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தலி உஷா காயத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தலி உஷா காயத்ரி
பிறப்புமல்லவரப்பு உஷா காயத்ரி
26 ஏப்ரல் 1955 (1955-04-26) (அகவை 70)
கர்னூல், ஆந்திர மாநிலம், இந்தியா
கல்வி
பணிகுச்சிப்புடி நடனக் கலைஞர்
பிள்ளைகள்1
விருதுகள்

மத்தலி உஷா காயத்ரி (Maddali Usha Gayatri, பிறப்பு ஏப்ரல் 26,1955) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரும், நடன இயக்குனரும், ஆசிரியரும் ஆவார். சங்கீத நாடக அகாதமி விருது பெற்ற இவர், தனது நடன அமைப்பு மற்றும் நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார். புராண, வரலாற்று மற்றும் சமூக கருப்பொருள்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். தனது 12 சீடர்களுடன் நிருத்யம் தர்சயாமி என்ற நடன நாட்டிய நிகழ்ச்சியை 12 மணி நேரம் தடையின்றி நிகழ்த்தினார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

உஷா காயத்ரி 26 ஏப்ரல் 1955 அன்று மல்லவரப்பு சுந்தரேசம் மற்றும் ஜனகம்மாள் ஆகியோருக்கு ஆந்திராவின் கர்னூலில் பிறந்தார்.[1] இவருக்கு இசைக்கலைஞரான உமா காயத்ரி என்ற ஒரு சகோதரி உள்ளார். 1988 ஆம் ஆண்டில் ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தெலுங்கு இலக்கியத்தின் வளர்ச்சி, நடனத்தில் வளர்ச்சி மற்றும் அவதாரம் ஆகியவற்றில் இந்துக் கடவுள் கிருட்டிணனின்[2] இரண்டாவது ராணியும்-மனைவியுயான சத்தியபாமாவின் பங்கு குறித்த தனது ஆய்வறிக்கையை தெலுங்கு பல்கலைக்கழகத்தில் வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்ரார்.[3]

நடனப் பயிற்சி

[தொகு]

காயத்ரி தனது 4 வயதில் தயாள் சரண் என்பவரிடம் நடனப் பயிற்சி பெற்றார். கதக், ஒடிசி மற்றும் இசையில் பயிற்சி பெற்ற போதிலும் இவரது ஆர்வங்கள் குச்சிப்புடியிலேயே இருந்தது. ஐதராபாத்திலுள்ள ‘குச்சிப்புடி கலாசேத்ரா’ என்ற நடன நிறுவனத்தில் வேதாந்தம் ஜெகந்நாத் சர்மாவிடம் குச்சிப்புடியைக் கற்றுக்கொண்டார்.[4] வி. சத்யநாராயண சர்மா, வேம்பதி சின்ன சத்யம் மற்றும் வேதாந்தம் பிரகலாத சர்மா ஆகியோரிடமிருந்து யக்சகானத்தில் பயிற்சி பெற்றார். மேலும் கமலாராணி என்பவரிடமிருந்து நட்டுவாங்கமும்[5][6] கற்றுக்கொண்டார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

உஷா காயத்ரி, ஜூன் 2010 இல், இந்து தெய்வமான பத்மாவதி பற்றிய ‘அலமேலுமங்கா சரிதம்’ என்ற நிகழ்ச்சிக்கு நடனமாடினார்.[7] நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றாலும், திருமலை வெங்கடாசலபதி கோயிலின்[8] தல புராணத்திலிருந்து விலகிச் சென்றதாக விமர்சிக்கப்பட்டது.[2] ஜூலை மாதத்தில், கிருட்டிணனின் முதல் மற்றும் இரண்டாவது ராணி-மனைவிகளான ருக்மணி மற்றும் சத்தியபாமாவின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ருக்மிணி-சத்யா என்ற நடன நிகழ்ச்சியை இவர் நிகழ்த்தினார். மேலும் முக்கிய இரு வேடங்களிலும் இவரே நடித்தார். பாகவதம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தில் ருக்மினியின் வேடத்தை இவர் உருவாக்கினார். மேலும் சத்யபாமாவுக்கு சித்தேந்திர யோகியின் (குச்சிப்புடி நடன அசைவுகள்) பாமாகலாபம் என்ற நடனத்தைப் பயன்படுத்தினார். இவரது நடிப்பிற்காகவும், ஒரே நிகழ்ச்சியில் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கி நடனம் ஆடியதற்காக காயத்ரி பாராட்டப்பட்டார்.

மார்ச் 2011 இல், உஷா மாத்ரு தேவோ பாவா என்ற நிகழ்ச்சியை வழங்கினார். அதில் இவர் பார்வதி, லீலாவதி, சீதை, யசோதை மற்றும் வகுளா தேவி ஆகியோரின் புராண வேடத்தில் நடித்தார். பாமிடிபள்ளி நரசிம்ம மூர்த்தி எழுதிய திரைக்கதையில், இவரது நடிப்பு மற்றும் நடனத்திற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.[9] ஆகஸ்ட் மாதம், இந்து காவியமான மகாபாரதத்தில் பாண்டவர்களின் தாயார் குந்தியின் வாழ்க்கை பற்றிய குந்தி விலாபத்தை நிகழ்த்தினார், இது ஜந்தியாலா பாப்பையா சாஸ்திரி என்பவரின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இதிலும் இவரது நடிப்பு மற்றும் நடனத்திற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.[10]

பின்னர் ஜூன் 2013 இல், கிருட்டிணனின் சாகசங்களைக் காட்டும் சோதச கிருஷ்ணம் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அன்னமாச்சாரியாரின் படைப்புகள் உட்பட பல்வேறு படைப்புகளிலிருந்து இவர் கருப்பொருளை எடுத்துக் கொண்டார்.[11] ஜூலை 2015 இல், நிருத்ய கின்னெரா என்ற தனது நடன நிறுவனத்தின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புஷ்கரா புலகித கோதாவரி மற்றும் அம்ராபாலி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். பாமிடிப்பள்ளி நரசிம்ம மூர்த்தி எழுதிய புஷ்கர புலகித கோதாவரி, கோதாவரி ஆற்றின் புனித நீராடும் விழாவைச் சுற்றி அமைந்துள்ளது. அதில் இவர் இந்து தெய்வமான பிருகஸ்பதியின் பாத்திரத்தில் நடித்தார். அதே நேரத்தில் அம்ராபாலியின் கௌதம புத்தராகவும் நடித்திருந்தார்.[12]

2016 மே மாதம், காயத்ரி குச்சிப்புடி கலையும் சத்தியபாமாவும் என்ற தலைப்பில் சத்யபாமாவை விவரிக்கும் பாமாகலாபம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு நடனமாடினார். நாராயண தீர்த்தர், நந்தி திம்மண்ணா மற்றும் தரிகொண்ட வேங்கமாம்பா உட்பட சத்யபாமாவைச் சுற்றியுள்ள இலக்கியங்கள் குறித்த பிற கவிஞர்களின் பகுதிகளை இவர் தனது நாடகத்தில் இணைத்தார்.[13] அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜூன்-ஜூலை மாதங்களில், 40 குச்சிப்புடி கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்ட குழுவுடன் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல நடன நிகழ்ச்சிகளில் நடித்தார்.[14] பிப்ரவரி 2017 இல், வேத காலம் முதல் இந்திய விடுதலை இயக்கம் வரையுள்ள இந்திய வரலாற்றின் கதையை விவரிக்கும் சுவெச்சா பாரத் (சுதந்திர இந்தியா ) என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார். பாமிடிப்பள்ளி நரசிம்ம மூர்த்தி எழுதிய திரைக்கதையில், இந்தியத் தாய் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[15]

வரலாற்று கருப்பொருள்கள் மற்றும் சமூக விழுமியங்கள் குறித்த நிகழ்ச்சிகளையும் உஷா காயத்ரி நிகழ்த்துகிறார். இவர் 200 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நடனமாடியுள்ளார். ஆலோகாய ஸ்ரீ பாலகிருஷ்ணம், கோதை கல்யாணம் ( ஆண்டாள் ),[16] இரால்லபந்தி கவிதா பிரசாத் மொழிபெயர்த்த இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியின் அடிப்படையில் ஒரு நடனம், குடிகொண்ட சிவபிரசாத் என்பவர் மார்க்கண்டேயரைப் பற்றி எழுதிய உரையின் அடிப்படையில் சிவபக்த மார்க்கண்டேயா, சங்கராந்தி லட்சுமி, சுவர்ணோத்சவ பாரதி, வந்தேமாதரம் போன்றவை அவற்றில் சில. கூடுதலாக நிருத்யம் தர்சயாமி என்ற தலைப்பில் தனது 12 சீடர்கள் கொண்ட குழு மூலம் 12 மணி நேரம் இடைவிடாமல் குச்சிப்புடியில் 72 கருத்தாக்கங்களுக்கு நடனமாடினார்.

பிற பணிகள்

[தொகு]

காயத்ரி, பஞ்சாப் தேசிய வங்கியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, தன்னார்வமாக ஓய்வு பெற்றார். 1983 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நிருத்ய கின்னெரா குச்சிபுடி நடன அகாதமியை நிறுவி அங்கு குச்சிபுடியைக் கற்பிக்கிறார்.[9] சனவரி 2018 அன்று, இவரது 44 சீடர்கள் மேடையில் அறிமுகமானார்கள்.

விருதுகள்

[தொகு]

காயத்ரி தனது பங்களிப்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் ஐக்கிய ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கலா ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[17] 2023 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[18]

சொந்த வாழ்க்கை

[தொகு]

காயத்ரி ஒரு கலைஞரும், கின்னெரா கலையரங்கத்தை நடத்துபவருமான மத்தலி ரகுராம் என்பவரை மணந்தார்.[19] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகள் சௌந்தர்யா கௌசிக்கும் குச்சிப்புடி நடனக் கலைஞர் ஆவார்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kuchipudi Kalakar Maddali Usha Gayatri Exclusive Interview | Kalaa Shikaram | Hindu Dharmam (Videotape) (in தெலுங்கு). Hindu Dharmam. 6 May 2017. Retrieved 17 December 2022.
  2. 2.0 2.1 Hudson, D. Dennis (25 September 2008). The Body of God: An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram (in ஆங்கிலம்). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 264. ISBN 978-0-19-970902-1.
  3. "నృత్యరత్న.. డా. మద్దాళి ఉషాగాయత్రి" (in te). ஆந்திர பூமி. 9 January 2018 இம் மூலத்தில் இருந்து 17 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221217173710/http://www.andhrabhoomi.net/content/main-feature-912. 
  4. Kothari, Sunil; Pasricha, Avinash (2001). Kuchipudi. Abhinav Publications. p. 158. ISBN 9788170173595.
  5. Journal of the Ananthacharya Indological Research Institute (in ஆங்கிலம்). Vol. 7–8. 2004. p. 95.
  6. M. Athira (14 June 2018). "'Nattuvangam' is not even treated as an instrument these days, says K.S.Balakrishnan" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/entertainment/music/in-conversation-with-nattuvanar-ksbalakrishnan/article24151554.ece. 
  7. Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. p. 291. ISBN 978-0-14-341421-6.
  8. Frykenberg, Robert Eric (1996). History and Belief: The Foundations of Historical Understanding (in ஆங்கிலம்). William B. Eerdmans Publishing Company. p. 155. ISBN 978-0-8028-0739-7.
  9. 9.0 9.1 Gudipoodi Srihari (24 March 2011). "Tribute to mothers in mythology" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/dance/Tribute-to-mothers-in-mythology/article14959771.ece. 
  10. Gudipoodi Srihari (25 August 2011). "Moods of Kunti" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/dance/moods-of-kunti/article2396419.ece. 
  11. Gudipoodi Srihari (27 June 2013). "Ways of Krishna" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/dance/ways-of-krishna/article4856011.ece. 
  12. Gudipoodi Srihari (2 July 2015). "Tales through ballets" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/dance/tales-through-ballets/article7379291.ece. 
  13. Gudipoodi Srihari (19 May 2016). "Repertoire on Satyabhama" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/dance/repertoire-on-satyabhama/article8619621.ece. 
  14. G. S. Subrahmanyam (5 July 2016). "Promoting Amaravati among expatriate Telugus" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/Promoting-Amaravati-among-expatriate-Telugus/article14474330.ece. 
  15. Gudipoodi Srihari (2 February 2017). "Maddali Usha Gayatri's dance for Republic Day" (in en-IN). தி இந்து. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/dance/Maddali-Usha-Gayatri%E2%80%99s-dance-for-Republic-Day/article17140204.ece. 
  16. Kumar, Ranee (31 May 2012). "Delightful and romantic" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/dance/delightful-and-romantic/article3472811.ece. 
  17. "Hamsa awards announced". The Times of India (in ஆங்கிலம்). 24 August 2001. Retrieved 16 December 2022.
  18. "Announcement of Sangeet Natak Akademi Awards for 2022 and 2023" (PDF). Sangeet Natak Akademi. 27 February 2024. Retrieved 20 March 2024.
  19. Bnim (September 2015). "మద్దాలి కిన్నెరసాని" [Maddali Kinnerasani]. acchamgatelugu.com (in தெலுங்கு). Retrieved 17 December 2022.
  20. "Soundarya, chiselled by two artisans - Natyahasini". Natyahasini. 21 May 2021. Retrieved 16 December 2022.

வெளியிடப்பட்ட படைப்புகள்

[தொகு]
  • అమ్మమ్మగారి కాశీయాత్ర [Grandmother's pilgrimage to Varanasi] (in தெலுங்கு). Kinnera Publications.[1]
  • Kuchipudi Art and Satyabhama (in ஆங்கிலம்). B. R. Rhythms. 2016. ISBN 9788188827565.
  1. "పుస్తక సమీక్ష" [Book review]. Namasthe Telangana (in தெலுங்கு). 6 February 2022. Retrieved 17 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தலி_உஷா_காயத்ரி&oldid=4420432" இலிருந்து மீள்விக்கப்பட்டது