மதேபுரா
மதேபுரா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மின் இரயில் எஞ்சின் உற்பத்தியகம் | |
ஆள்கூறுகள்: 25°55′12″N 86°47′31″E / 25.920°N 86.792°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரதேசம் | மிதிலை பிரதேசம் |
மாவட்டம் | மதேபுரா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மதேபுரா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 26 km2 (10 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 54,472 |
• அடர்த்தி | 2,100/km2 (5,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• கூடுதல் மொழிகள் | ஆங்கிலம் |
• பிரதேச மொழி | மைதிலி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 852113 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | BR-43 |
மக்களவை தொகுதி | மதேபுரா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | மதேபுரா சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | madhepura |
மதேபுரா (Madhepura), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கிழக்கே உள்ள மிதிலைப் பிரதேசத்தில் அமைந்த மதேபுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு வடகிழக்கே 247 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மதேபுரா நகரத்தில் மதேபுரா மின் இரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 26 வார்டுகளும், 10,577 குடியிருப்புகளும் கொண்ட மதேபுரா நகரத்தின் மக்கள் தொகை 54,472 ஆகும். அதில் 28,980 ஆண்கள் மற்றும் 25,492 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.65 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.08 % மற்றும் 0.37 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 81.90%, இசுலாமியர் 17.36%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.41%, சீக்கியர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.32% வீதம் உள்ளனர்.[1]இந்நகர மக்கள் தங்கள் தாய் மொழியான மைதிலி மொழி பேசுகின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இரயில் நிலையம்
[தொகு]இரண்டு நடைமேடைகள் கொண்ட தௌரம் மதேபுரா தொடருந்து நிலையம்[2]பட்னா, பூர்ணியா, சமஸ்திபூர், சகார்சா தர்பங்கா, ராஞ்சி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
நெடுஞ்சாலை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 131 (இந்தியா) மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 231 ஆகியவைகள் மாதேபுரா நகரம் வழியாகச் செல்கிறது.