மது யாதவ்
Appearance
மது யாதவ் (Madhu Yadav) இந்தியப் பெண்கள் தேசிய வளைகோல் பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியாவார். [1] இந்தியன் இரயில்வே அணிக்காக விளையாடிய இவர் இந்தியாவுக்காக வீர்ர், தலைவர், பயிற்சியாளர் என அனைத்து நிலைகளிலும் பங்கேற்றுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சபல்பூரைச் சேர்ந்தவரான இவர்[2] 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். [3] ஓய்வுக்குப் பிறகு இவர் சில காலம் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். [4] 2000 ஆம் ஆண்டு இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. [5] இந்திய வளைகோல் பந்தாட்ட மேலாண்மைக் குழுவின் உறுப்பினராகவும் மது யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reporter, Sports (September 16, 2009). "Hockey India announces selection committee" – via www.thehindu.com.
- ↑ "Madhya Pradesh: Former Indian women's hockey team captain celebrates India's victory against Australia". Free Press Journal.
- ↑ "IHF inducts Sodhi, Carvalho, Madhu Yadav in Managing Committee | Hockey News - Times of India". The Times of India.
- ↑ Lamba, Harpreet Kaur (November 12, 2017). "The real Chak De girls". Deccan Chronicle.
- ↑ "Arjuna Award". Hockey India.