மது திரெகான்
மது திரெகான் | |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | வெல்ஹாம் பெண்கள் பள்ளி கொலம்பியா பல்கலைக்கழகம்,நியூயார்க் |
| பணி | பத்திரிகையாளர்,கட்டுரையாளர்,எழுத்தாளர் |
| அறியப்படுவது | நிறுவன ஆசிரியர், இந்தியா டுடே (1975) |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தெகல்கா ஆஸ் மெட்டாபோர் (2009) |
| வாழ்க்கைத் துணை | நரேஷ் திரெகான் |
| உறவினர்கள் | ஆரூன் பூரி (சகோதரர்), மந்திரா பூரி (சகோதரி) |
மது திரெகான் ( Madhu Trehan) இந்தியாவில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒர் பெண் பத்திரிகையாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் நியூஸ்லாண்ட்ரி [1][2] என்ற எண்ணிம முறை ஊடகத்தின் இணை நிறுவனராகவும் மற்றும் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.
பிறப்பு
[தொகு]இவர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் வி. வி. புரி என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.
கல்வி
[தொகு]இவர் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் தேராதூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் படித்து, 1962 இல் பட்டம் பெற்றார்.[3][4] 1968 இல், இவர் பத்திரிகை புகைப்படக் கலை குறித்த மேல்படிப்பிற்க்காக இலண்டனில் உள்ள ஹாரோ தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கலைப் பள்ளியில் சேர்ந்தார்.[5] 1972 இல் நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6] நியூயார்க் நகரில் இருந்தபோது, இவர் ஐக்கிய நாடுகள் அவையின் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். மேலும் இந்தியா அப்ராட் என்ற வாராந்திர செய்தித்தாளின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[6]
தொழில்
[தொகு]1975 ஆம் ஆண்டு[6] தாம்சன் பிரஸ் உரிமையாளரான தனது தந்தை வி. வி. புரியுடன் இணைந்து இந்தியா டுடே என்ற செய்தி இதழை நிறுவித் தொடங்கியபோது டிரெஹான் இந்தியா திரும்பினார்.[7][8] 1977 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, திரெகாஹான் அந்தப் பத்திரிகையை தனது சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு, தனது குடும்பத்தைத் தொடங்க நியூயார்க்கிற்குத் திரும்பினார்.[7][9] 1986 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும், திரெகான் நியூஸ்ட்ராக் என்ற இந்தியாவின் முதல் காணொளி செய்தி இதழைத் தயாரித்து தொகுத்து வழங்கினார்.[10] இது ஒரு முன்னோடி புலனாய்வு பத்திரிகையாளராக இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது.[6]
சொந்த வாழ்க்கையும் குடும்பமும்
[தொகு]திரெகான் இந்திய இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணரான,[11] நரேஷ் தெரகான் என்பவரை மணந்தார்.[12] இந்தியா டுடேவின் முன்னாள் நிறுவனர்-வெளியீட்டாளரும் தலைமை ஆசிரியருமான ஆரூன் பூரி இவரது சகோதரர் ஆவார். பாலிவுட் நடிகை கோயல் பூரி இவரது மருமகள்.[13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sharma, Disha. "Digital media startup Newslaundry gets funding from Omidyar, others".
- ↑ Newslaundry. "Newslaundry | Sabki Dhulai" (in en-us). Newslaundry. https://www.newslaundry.com/about.
- ↑ "Old school skirt – Indian Express". Archive.indianexpress.com. 2006-06-24. Retrieved 2020-04-12.
- ↑ "Dehradun's journey to town of schools, with Miss Oliphant". The Tribune India. 2019-09-22. Retrieved 2020-04-12.
- ↑ "Madhu Trehan | Best Selling Indian Authors". Tehelka as Metaphor. Retrieved 2020-04-12.
- 1 2 3 4 "Jury". Light of India Awards. Retrieved 21 August 2012.
- 1 2 Bhandare, Namita (21 May 2011). "70's: The decade of innocence". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 17 August 2012. Retrieved 21 August 2012.
- ↑ Kaminsky, Arnold P.; Long, Roger D. (2011). India Today: An Encyclopedia of Life in the Republic. ABC-CLIO. p. 347. ISBN 978-0313374623.
- ↑ "Tehelka trail". The Tribune. 21 April 2009. Retrieved 21 August 2012.
- ↑ Nanda, Har Parshad (1992). The Days of My Years. Viking. p. 212. ISBN 9780670847273.
- ↑ "Dr Naresh Trehan profile". Credihealth. 2017. Retrieved 20 March 2017.
- ↑ "Ace of hearts: Dr Naresh Trehan". Harmony India. 2012. Retrieved 17 August 2012.
- ↑ Roy, Amit (17 December 2014). "Red Hot". The Telegraph இம் மூலத்தில் இருந்து 2 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140602073512/http://www.telegraphindia.com/1041217/asp/etc/story_4127827.asp.
- ↑ "Newstrack – The video magazine that served real issues to news-hungry Indians in DD era". The Print. 23 June 2019. https://theprint.in/features/brandma/newstrack-the-video-magazine-that-served-real-issues-to-news-hungry-indians-in-dd-era/253392/.