மதுர் ஜாஃபரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுர் ஜாஃபரீ
Madhur Jaffrey crop.jpg
அக்டோபர் 2010இல் வானகூவரில் ஒரு புத்த கையேழுத்திடும் நிகழ்ச்சியில் மதுர் ஜாஃபரீ.
தாய்மொழியில் பெயர்मधुर जाफ़री
பிறப்புமதுர் பஹதுர்
13 ஆகத்து 1933 (1933-08-13) (அகவை 86)
தில்லி, பிரித்தானிய இந்தியா
இருப்பிடம்நியூ யார்க், அமெரிக்க ஐக்கிய நாடு
இலண்டன், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பல்கலைக்கழகம்
வாழ்க்கைத்
துணை
சயித் ஜாஃபரீ
(தி. 1958; விவா. 1966)

சான்ஃபோர்ட் ஆலன் (தி. 1969)
பிள்ளைகள்ஃஜியா ஜாஃபரீ (பி. 1959)
மீரா ஜாஃபரீ (பி. 1960)
சகினா ஜாஃபரீ (பி. 1962)
வலைத்தளம்
www.madhur-jaffrey.com

மதுர் ஜாஃபரீ (Madhur Jaffrey), (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1933) இந்தியாவில்-பிறந்த நடிகை, உணவு மற்றும் பயண எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார்.[1][2] இவர் எழுதிய முதல் சமையல் புத்தகமான , இந்தியன் க்யூசைன்(1973) 2006 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை குக்புக் ஹால் ஆஃப் ஃபேமில் வைக்கப்பட்டது. இந்நூலின் மூலம் இந்திய உணவுமுறை அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்றது.[3][4][5] அதன்பின் பல சமையல் நூல்களை எழுதியுள்ளார். சமையல் தொடர்பான பல தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இந்தியன் குக்கரி , இது இங்கிலாந்தில் 1982 இல் தொலைக்காட்சியில் வெளிவந்தது.[6] நியூ யார்க் நகரத்தில் உள்ள தவத் என்ற இந்திய உணவகம் பல உணவு விமர்சகர்களால் பாராட்டப்பெற்றது. இவ்வுணவகத்திற்கு ஆலோசகராக மதுர் ஜாஃபரீ பணியாற்றுகிறார்.[7][8][9]

இவர் ஷேக்ஸ்பியர் வால்லா (1965) போன்ற பல படங்களில் நடித்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகையாக 15ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றார்.[10] ரேடியோ, மேடை மற்றும் தொலைக்காட்சியில் நாடகங்களில் அவர் தோன்றினார்.[11]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஜாஃபிரி சிவில் லைன்ஸ், தில்லியில் , ஒரு காயஸ்தா இந்து கூட்டு குடும்பத்தில் பிறந்தார் .[12][13] லாலா ராஜ் பான்ஸ் பகதூர் (1899-1974) மற்றும் அவரது மனைவி காஷ்மீரன் ராணிக்கு (1903-1971) பிறந்த ஆறு குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார்.[14][15] மதுராவின் தாத்தா, ராய் பஹதூர் ராஜ் நரேன் (1864-1950), தோட்டங்களின் மத்தியில், யமுனை ஆற்றின் கரையில் எண் 7 ராஜ் நாராயண் மார்க் என்ற பெயரில் ஒரு பரந்த வீட்டைக் கட்டினார்.[சான்று தேவை]

குறிப்புகள்[தொகு]

 1. "From actress to cookbook author: The lives of Madhur Jaffrey". Associated Press. 20 October 2015. http://bigstory.ap.org/article/21a4586ea766458a9e0f6dcb782e6c6f/actress-cookbook-author-lives-madhur-jaffrey. பார்த்த நாள்: 20 October 2015. 
 2. "Encyclopedia of Television - Jaffrey, Madhur". Museum of Broadcast Communications (25 October 2013). பார்த்த நாள் 15 October 2015.
 3. "Madhur Jaffrey". My Kitchen Table. பார்த்த நாள் 15 October 2015.
 4. "Six to watch: TV chefs". The Guardian. 26 September 2012. https://www.theguardian.com/tv-and-radio/tvandradioblog/2012/sep/26/six-to-watch-tv-chefs. பார்த்த நாள்: 15 October 2015. 
 5. "New York Dominates at Beard Awards". New York Times. 10 May 2006. https://www.nytimes.com/2006/05/10/dining/10bear.html. பார்த்த நாள்: 15 October 2015. 
 6. "Live chat: Madhur Jaffrey". The Guardian. 7 November 2012. https://www.theguardian.com/lifeandstyle/wordofmouth/2012/nov/07/live-chat-madhur-jaffrey. பார்த்த நாள்: 15 October 2015. 
 7. "Restaurants". New York Times. 12 December 1986. https://www.nytimes.com/1986/12/12/arts/restaurants-676386.html. பார்த்த நாள்: 15 October 2015. 
 8. "Restaurants". New York Times. 5 July 1991. https://www.nytimes.com/1991/07/05/arts/restaurants-637091.html. பார்த்த நாள்: 15 October 2015. 
 9. "Unsung Chefs In a City of Stars". New York Times. 14 June 1995. https://www.nytimes.com/1995/06/14/garden/unsung-chefs-in-a-city-of-stars.html?pagewanted=all. பார்த்த நாள்: 15 October 2015. 
 10. "Prizes & Honours 1965 - International Jury". Internationale Filmfestspiele Berlin. பார்த்த நாள் 15 October 2015.
 11. "She Also Cooks Just a Trifle, This Actress". New York Times. https://www.nytimes.com/2000/03/14/nyregion/she-also-cooks-just-a-trifle-this-actress.html. பார்த்த நாள்: 15 October 2015. 
 12. "Desert island dish". https://www.theguardian.com/lifeandstyle/2001/sep/09/foodanddrink.recipes. பார்த்த நாள்: 15 October 2015. 
 13. Climbing the Mango Trees: A Memoir of a Childhood in India. 
 14. Climbing the Mango Trees: A Memoir of a Childhood in India. 
 15. "Family Tree of Rai Bahadur Jeewan Lal ji - Family Chart 10". பார்த்த நாள் 15 October 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுர்_ஜாஃபரீ&oldid=2895066" இருந்து மீள்விக்கப்பட்டது