மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை [1] [2] என்னும் நூல் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய நூல்களில் ஒன்று. தமிழ் மொழியில் தோன்றிய முதல் இரட்டைமணிமாலை காரைக்கால் அம்மையாரால் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாடப்பட்டது. அதுமுதல் பற்பல இரட்டைமணிமாலை நூல்கள் தோன்றின. வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய இருவகைப் பாக்கள் மாறி மாறி அடுத்தடுத்து வரும்படி அந்தாதித் தொடையோடு 20 பாடல்களைக் கொண்டதாய்ப் பாடப்படுவது இரட்டைமணிமாலை. இந்த நூலும் இந்த இலக்கண நெறியில் பாடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மை இந்த நூலின் பாட்டுடைத் தலைவி.

பாடல் - எடுத்துக்காட்டு [3][தொகு]

கடம்ப வன வல்லி, செலுவக் கர்ப்பூர வல்லி,
மடந்தை அபிடேக வல்லி - நெடுந்தகையை
ஆட்டுவிப்பாள் ஆடல் இவட்கு ஆடல் வேறு இல்லை எமைப் பாட்டுவிப்பதும் கேட்பதும் [4]

நா உண்டு நெஞ்சு உண்டு நற்றமிழ் உண்டு நயந்த சிவ
பா உண்டு இனங்கள் பலவும் உண்டே பங்கில் கொண்டிருந்தோர்
தே உண்டு உவக்கும் கடம்பாடு அவிப் பசுந்தேனின் பைந்தாள்
பூ உண்டு நார் ஒன்று இலையாம் தொடுத்துப் புனைவதற்கே. [5]

வெளி இணைப்பு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 122. 
  2. குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. பக். 521. 
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. வெண்பா
  5. கட்டளைக்கலித்துறை