மதுரை மாநகரின் திருவிழாக்களும் ,சுற்றுலாத் தலங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரை மாநகரின் திருவிழாக்களும் ,சுற்றுலாத் தலங்களும் :

          வைகை நதியின் கரையில் அமைந்திருக்கும் மதுரை பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.மதுரை மாநகரைசுற்றிலும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்புபெற்றவை.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா :

நகரின் அதிமுக்கிய திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இது மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி நடைபெறுவதால் தொடர்ந்து இரு வாரங்களுக்கு நகர் முழுவதும் விழாப் கோலத்தில் இருக்கும். இந்தத் திருவிழா சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் முஸ்லிம்களையும் பங்கு கொள்ளச் செய்கிறது.

மீனாட்சி அம்மன் கோவில் :

பாண்டிய மன்னன் குலசேகரன் மீனாட்சி அம்மன் கோவிலை நகரின் மையத்தில் ஸ்தாபித்து அதைச் சுற்றி தாமரை வடிவிலான நகரை அமைத்தான். இந்த நகரில் சிவபெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. இன்றும் கூட சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன

கோவில் நகரம்

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன. மதுரைக்கு மிக அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் ஆகும்.

மதுரை -சுற்றுலாத் தலங்கள்

அழகர்கோவில் காந்தி அருங்காட்சியகம் கீழக்குயில்குடி சமணர் படுகைகள் குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மீனாட்சியம்மன் கோயில் திருப்பரங்குன்றம் திருமலை நாயக்கர் மஹால் தெப்பகுளம் பழமுதிர்சோலை பாலமேடு ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனை சுற்றியில்ல அனைத்து சுற்றல மையங்களுக்கும் உள்ளாட்சி அமைப்பால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. நாயக்கர் மஹால் பல கோடி செலவிடப்பட்டு ஒலி-ஒளி காட்சி போன்ற அம்சங்களுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது.

Reference: "Welcome to Madurai – Festivals". National Informatics Centre, Government of Tamil Nadu. Retrieved 18 June 2010. "Tourism in Madurai". Madurai, India: National Informatics Centre, Government of Tamil Nadu. Retrieved 30 June 2012.