மதுரை மாநகரின்முக்கிய இடங்கள்:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரை மாநகரின்முக்கிய இடங்கள்::

              தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஓன்று மதுரை ஆகும் . மதுரை மாநகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது. சீனப் பாசி கலந்த ஒரு வகை குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றலாப் பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.

மதுரை மாநகரின்முக்கிய இடங்கள்:

1.ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்:

புராதனமான, நன்கு கட்டப்பட்ட கோவில். இந்தியாவில் எல்லாப் பகுதியிலும் மதுரை தெரிந்த பெயராக இருக்கக் காரணமானது. நகரின் மையத்தில் இருக்கிறது. ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள், கலைப்பொருட்கள் மியூசியம் ஆகியவை கோவிலில் பார்க்க வேண்டியவை.

2.திருமலை நாயக்கர் மஹால்: திருமலை நாயக்கர் மஹால்இந்தோ-சார்செனிக் கட்டிட அமைப்பில் அமைந்த அரண்மனை. 1523ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்போது மிச்சமிருப்பது கால் பங்கிற்கும் குறைவு. மற்ற பகுதிகள் வீடுகளாகவும் தெருக்களாகவும் மாறி விட்டன. மஹாலுக்கு பின்புறம் சற்றுதூரம் தள்ளி அரண்மனையின் பெரும் தூண்கள் மட்டும் ஒரு சிறிய சந்தின் (சந்தின் பெயர்: பத்துத் தூண் சந்து) வரிசையாக நிற்கின்றன.

3.தெப்பக்குளம்: தெப்பக்குளம் மதுரையின் கிழக்குப் பகுதியில் பரந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இணையான நிலப்பரப் பில், மன்னர் திருமலை நாயக்கரால் 1646ல் அமைக்கப்பட்ட குளத்தின் நடுவில் தீவு போல மரங்களும் மைய மண்டபமும் உள்ளது. முன்பு வைகை நதியிலிருந்து தெப்பக்குளத்திற்கு நீர் வரும் வழிகள் இருந் ததாக சொல்லப்படுகிறது. தற்போது தெப்பத் திருவிழா தவிர மற்ற சமயங்களில் காலியாக இருக்கும்.

4.கூடல் அழகர் கோவில்: மிகப் பழமையான கோவில். 108 திருப்பதிகளில் ஒன்று. பெரியார் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள இக்கோவில் பாண்டியர் காலத்தில் மதுரையை அடுத்த கிராமமாக இருந்ததாக கூறுவர்.

5.காந்தி மியூசியம்: காந்தி மியூசியம்ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையில் அமைந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெளிவான வரலாற்றையும், காந்தியைப் பற்றி பல அரிய விஷயங்களையும் அறியலாம். காந்தி சுடப்பட்டு இறக்கும் போது அணிந்திருந்த (இரத்தக் கறை படிந்த) மேல் துண்டு இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள்ளேயே மாநில அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.

6.திருப்பரங்குன்றம்: முருகனின் ஆறு படை வீடுகளில் முதலாவது. குடைவரைக் கோவில். மதுரையின் தெற்குப் பகுதியில் 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

7.அழகர் கோவில்: அழகர் கோவில்:மதுரையிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் ரம்மியமான சூழ்நிலையில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியே சித்திரைத் திருவிழாவில் முக்கிய அம்சமாகும்.

8.பழமுதிர் சோலை:

அழகர் கோவில் மலையில் அமைந்துள்ளது. அழகர் கோவிலில் இருந்து மலை மீது சுமார் 1 1/2 கி.மீ. செல்ல வேண்டும். வேன் வசதி உண்டு. முருகனின் ஆறு படை வீடுகளில் ஆறாவது படை வீடு இது. Reference: Gandhi Memorial Museum, Madurai". Bombay Sarvodaya Mandal / Gandhi Book Centre. Retrieved 22 August 2012. "Gandhi relics should be a medium to spread the message: Gandhi Museum director". Tha Indian. 5 March 2009. Retrieved 8 March 2009. Catholic Diocese of Madurai". Archdiocese of Madurai. 2011. Retrieved 15 June 2008.