மதுரை மதனகோபாலசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை மதனகோபாலசுவாமி திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கதலிவனக்ஷேத்திரம்[1]
பெயர்:மதுரை மதனகோபாலசுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:மதுரை
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாமா ருக்மிணி சமேத மதனகோபால சுவாமி, (ஸ்ரீவேணுகோபாலன்)
உற்சவர்:மதன கோபாலன்
தாயார்:ஸ்ரீ மதனமதுர வல்லித் தாயார்
தல விருட்சம்:கதலி
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:அஷ்டாங்க விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

மதுரை மதனகோபாலசுவாமி திருக்கோயில் மதுரையில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயில்.

தலவரலாறு[தொகு]

சிவபெருமான் பெரும் தவம் செய்தபோது எழுந்த அக்கினியைக் கண்டு அஞ்சிய தேவர்களைக் காக்க திருமால் வேணுகோபாலனாக எழுந்தருளி வேணு கானம் இசைத்தருள, சிவபெருமானின் உக்கிர தபசு குறைந்து மீனாட்சியம்மையை மணம் புரிந்து தம்பதிகளாக இத்தல இறைவனைக் கண்டு சென்றனர்.

இத்திருத்தலத்தில் ஆண்டாள் மதனகோபாலரைக் கண்டு காதல் கொண்டதாகவும் கூறுவதுண்டு. [1]

கல்வெட்டுகள்[தொகு]

இத்திருக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது.[சான்று தேவை] இத்திருக்கோயிலின் புறச்சுவர்களிலுள்ள கல்வெட்டுகள் 1907 ஆம் ஆண்டு நகல் எடுக்கப்பட்டு தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் 502 முதல் 511 வரையிலான எண்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. [1]

கல்வெட்டுகளில் இத்தலத்து இறைவனுக்கு, திருத்துருத்தி மகாதேவர், ஏழுலக் முழுதுடையான், அழகிய மணவாளன் எனும் பெயர்கள் காணப்படுகின்றன. [1]

பிலடெல்பியாவில் இத்திருக்கோயிலின் தூண்கள்[தொகு]

அறுபது ஆண்டுகளுக்கும் முன்னர் அதிகப்படியாக, கவனிப்பாரில்லாமல் இருந்த இத்திருக்கோயிலின் 36 பழம்தூண்கள் ஏலம் விடப்பட்டன. அமெரிக்காவின் கிப்சன் என்பவர் அவற்றை ஏலத்தில் எடுத்து அமெரிக்கா கொண்டு சென்றார். அவற்றை பயன்படுத்தி கோயில் மண்டபம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பை 1938 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கண்காட்சிக்கு வழங்கினார்.[1]

சிறப்புகள்[தொகு]

சக்கரத்தாழ்வார், துர்க்கை, நவக்கிரக சந்நதியும் அமைந்துள்ள கண்ணன் கோயில்.[1]

திருப்பணிகள்[தொகு]

  • 1942 ஆம் ஆண்டு வசந்த மண்டபம் கட்டப்பட்டது.
  • 9.6.1965 அன்று மாபெரும் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
  • 29.5.1994 அஷ்ட பந்நன மகா சம்ப்ரோஷணம்.[1]

சௌராஷ்டிர பக்தர்கள்[தொகு]

கண்ணன் மேல் சௌராஷ்டிர சமூகத்தினர் மிகுந்த பக்தி கொண்டவர்களாதலால் இத்தல மூர்த்திகளுக்கு வேண்டிய ஆடைகளை அவர்களே வழங்கினர். [1]

நூல்கள்[தொகு]

இத்தலத்து கண்ணன் மேல் பாடப்பட்ட நூல் "மதன கோபால சதகம்".[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 கண்ணன் திருக்கோயில்கள்; பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்; பக்கம் 274-283

வெளியிணைப்புகள்[தொகு]