மதுரை உயர்மறைமாவட்டம்
தோற்றம்
| மதுரை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madhuraiensis | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| புள்ளிவிவரம் | |
| பரப்பளவு | 8,910 km2 (3,440 sq mi) |
| மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 5,495,800 170,000 (3.1%) |
| விவரம் | |
| வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
| கதீட்ரல் | புனித மரியன்னை பேராலயம் |
| தற்போதைய தலைமை | |
| திருத்தந்தை | 14ம் லியோ
பேராயர்: அந்தோனிசாமி சவரிமுத்து |
மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
வரலாறு
[தொகு]- ஜனவரி 8, 1938: திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து மதுரா புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது
- அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
- செப்டம்பர் 19, 1953: மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
தலைமை ஆயர்கள்
[தொகு]- மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (உரோமன் ரீதி)
பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து
அப்போஸ்தலிக்க பரிபாலகர் (04.11.2024-05.07.2025)
பேராயர்:(02.08.2025 - முதல்)
- பேராயர் அந்தோனி பாப்புசாமி (24.08.2014-04.11.2024)
- பேராயர் பீட்டர் பெர்னான்டோ (24.04.2003-24.08. 2014)
- பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (28.08.1987-24.04.2003)
- பேரருட்திரு டி. எ. சூசை
உயர்மறைமாவட்டப் பரிபாலகர்: (25.03.1987-28.08.1987)
- பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், சே. ச. (16.06.1985-25.03.1987)
- பேராயர் ஜஸ்டின் திரவியம் (06.07.1967 - 16.06.1985)
- பேராயர் ஜான் பீட்டர் லெயோனார்டு சே.ச. (08.01.1938 - 06.07.1967)
கீழுள்ள மறைமாவட்டங்கள்
[தொகு]- திண்டுக்கல் மறைமாவட்டம்
- கோட்டாறு மறைமாவட்டம்
- பாளையங்கோட்டை மறைமாவட்டம்
- சிவகங்கை மறைமாவட்டம்
- திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
- தூத்துக்குடி மறைமாவட்டம்
- குழித்துறை மறைமாவட்டம்