மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலைய நுழைவு வாயில்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். மதுரை மாநகருக்கு மேற்குப்பகுதிகளில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் செல்லும் வெளியூர் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற முக்கிய ஊர்களுக்கும், இந்நகரங்களைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மாவட்டங்களிலுள்ள பிற ஊர்களுக்கும் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமங்கலம் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாநகரின் சில முக்கியப் பகுதிகளுக்கும் இங்கிருந்து 24 மணி நேரமும் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இவற்றையும் காணவும்[தொகு]