மதுரா தாசு மாத்தூர்
மதுரா தாசு மாத்தூர் Mathura Das Mathur | |
|---|---|
1962ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 அன்று செய்ப்பூரில் உள்ள ஆம்பர் அரண்மனை முற்றத்தில், அமெரிக்காவின் முதல் பெண்மணி இயாக்குலின் கென்னடியுடன் ஒரு யானையின் மீது அமர்ந்திருக்கும் மாதுர். | |
| பிறப்பு | 6 செப்டம்பர் 1918 இராசத்தான், இந்தியா |
| இறப்பு | 14 ஏப்ரல் 1993 (வயது 75) |
மதுரா தாசு மாத்தூர் (Mathura Das Mathur) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சோத்பூரில் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இலக்னோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1948-ஆம் ஆண்டில், மார்வார் பிரதேசத்தின் முதல் அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1957-ஆம் ஆண்டில் நாகௌர் தொகுதியிலிருந்து 2-ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை இராசத்தான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், 1952ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை இராசத்தான் சட்டமன்றத்தின் முதல் 'தலைமைக் கொறடா'வாகவும் செயல்பட்டார்.
மதுரா தாசு மாத்தூரின் நினைவாக, இராசத்தான் அரசு அப்பகுதியைச் சேர்ந்த திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் மதுராதாசு மாத்தூர் விருதை வழங்கி வருகிறது.[1]
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று மாத்தூர் காலமானார்.
