மதுராபுரி அம்பிகை மாலை
Jump to navigation
Jump to search
மதுராபுரி அம்பிகை மாலை என்பது ஒரு சிறு நூல்.
இதில் 30 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன.
மற்றும் காப்பு, நூற்பயன் கூறும் இரண்டு பாடல்களும் உள்ளன.
நூல் மதுரை மீனாட்சியம்மையைச் சிறப்பித்துப் பாடுகிறது.
இதன் பாடலுக்கு எடுத்துக்காட்டு:
1
ஒளிகொண்ட வெண்பிறைத் தோடும்பொன் ஓலையும் ஊறியதேன்
துளிகொண்ட செங்கனி வாயும்முத் தாரமும் தோளுமென்றன்
களிகொண்ட நெஞ்சம் குடிகொண்ட வா,விசை கக்குமணி
அளிகொண்ட பூங்குழ லாய்,மது ராபுரி அம்பஅகையே
2
ஒழியாப் பனித்தடங் கண்ணீர் சொரியவந் துன்னடிக்கே
பொழியாப் புதுமலர் இட்டுநிற் பாருக்குன் பொழிகருணை
விழியால் சுரப்ப அலர்ந்த,செந் தாமரை வீடொன்றவே
அழியாப் பதந்தரு வாய்,மது ராபுரி அம்பிகையே.
- இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
இவற்றையும் பார்க்க[தொகு]
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005