மதுமிதா ரவுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுமிதா ரவுத்

மதுமிதா ரவுத் (Madhumita Raut) இவர் ஓர் ஒடிசியின் (ஒரிசி) இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் மம்தா குந்தியா மற்றும் மாயதர் ரவுத் ஆகியோரின் மகளாவார். 1950 களில் சாஸ்திர அடிப்படையிலான அறிவுடன் ஒடிசியை (இந்திய பாரம்பரிய நடனம்) புதுப்பித்தார். இவர் தில்லியில் வசிக்கிறார். ஜெயந்திகா சங்கத்தின் கீழ் மாயாதர் ரவுத் ஒடிசி நடனப்பள்ளி என்ற ஒன்றை நிர்வகித்து, கற்பிக்கிறார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தனது தந்தையின் பயிற்சியின் கீழ் நடனம் மற்றும் இசையின் சூழலில் தில்லியில் வளர்ந்த மதுமிதா ரவுத் தனது கல்வித் தகுதிகளை பாரதிய வித்யா பவன் பள்ளி மற்றும் தில்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா கல்லூரியில் பெற்றார். [2] தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், கலை நிகழ்ச்சியில் சான்றிதழ் பட்டயமும் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

மதுமிதா ரவுத் ஒடிசி நடனத்தின் மாயாதர் ரவுத் கரானாவின் தனது தந்தையின் வழியை பின்பற்றுபவர் ஆவார். அதன் அருள், வெளிப்பாட்டின் ஆழம் மற்றும் பாரம்பரியம் 'சாஸ்திரம்' சார்ந்த தொழில்நுட்ப முழுமைக்கு பெயர் பெற்றவராவார். இவரது கண்டுபிடிப்புகளில் அங்கேரிய கவிதை பற்றிய பாடல்கள், கேத்தாவின் கவிதைகள் பற்றிய நடன அமைப்புகள், நெதர்லாந்தின் பாலினீசிய நடனக் கலைஞர் தியா தந்திரியுடன் இணைவு இவர் சமூக காரணங்களுக்காக நடன ஊடகத்தை திறம்பட பயன்படுத்தினார். தில்லி, இந்தியன் புற்றுநோய் அமைப்பு, உலக வனவிலங்கு நிதி - இந்தியா, பெண்களின் பிறப்புக்கு முந்தைய ஒழிப்புக்கு எதிரான பிரச்சாரம், தி ஆர்ட் ஆஃப் லிவிங் மற்றும் 'ஹேவ்-நோட்ஸ்' மேம்பாட்டிற்காக இவர் பல நிக்ழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

கொனர்க் சூரிய கோவிலில் ஒடிசி பாவனையில் மதுமிதா ரவுத்

நெதர்லாந்து தொலைகாட்சி இவர் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளது. ஸ்டட்கர்ட் (ஜெர்மனி) மற்றும் அங்கேரிய தொலைக்காட்சிகள் இந்தியா குறித்த ஆவணப்படங்களில் ரவுத்தின் நடனத்தை காட்சிப்படுத்தியுள்ளன. டச்சு தொலைக்காட்சி தயாரிக்கும் ஒரு படத்திலும் ரவுத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய விழுமியங்களை சித்தரிக்கும் இந்த படம் மேற்கு ஐரோப்பா முழுவதும் மிகவும் பாராட்டப்பட்டது.

மதுமிதா ரவுத் இந்தியா மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி, ஆஸ்திரியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரான்ஸ், போர்ச்சுகல், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய நடன விழாக்களில் நடனமாடியுள்ளார். அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ஒசி கற்பிக்கிறார். [3]

ஒரிசா மாநில குங்கூர் சம்மன், உத்கல் கன்யா விருது, மகிலா சக்தி சம்மன், பாரத் நிர்மன் விருது, ஒடிசா லிவிங் லெஜண்ட் விருது 2011 என பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றார்.

2007 இல் டெல்லியின் பி.ஆர்.ரிதம்ஸால் வெளியிடப்பட்ட "ஒடிசி: வாட், வொய் அன்ட் ஹௌ: எவால்யேசன், ரிவீவல் அன்ட் டெக்னிக்கல்" என்ற நூலை மதுமிதா ரவுத் எழுதியுள்ளார். [4]

விருதுகள்[தொகு]

ரவுத் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்:

1997ஆம் ஆண்டு பாரத் நிர்மன் விருதினையும், [5] 2010இல் ஒரிசா மாநிலம் குங்கூர் சம்மன் விருதினையும் [6] 2010இல் உத்கல் கன்யா விருதினையும், அதே ஆண்டில் மகிலா சக்தி சம்மன் விருதினையும், 2011இல் 2011இல் ஒடிசா வாழும் கலைஞர் விருதினையும் பெற்றுள்ளார். [7]

குறிப்புகள்[தொகு]

  1. "DANCE diaries". தி இந்து. 2014-10-09. http://www.thehindu.com/features/kids/dance-diaries/article6485659.ece. 
  2. "Grand welcome awaits fuchchas". Times of India. 2007-07-08. http://timesofindia.indiatimes.com/city/delhi/Grand-welcome-awaits-fuchchas/articleshow/2185536.cms. 
  3. "Odissi Workshop in Germany". Orissa Diary. 16 May 2011 இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120403004108/http://orissadiary.com/ShowOriyaOrbit.asp?id=26667. 
  4. Odissi: What, Why and How: Evolution, Revival & Technique by Madhumita Raut, Published B.R.Rhythms, Delhi,2007.ISBN 81-88827-10-X.
  5. "Bharat Nirman Awards". http://bharatnirman.org/awards.html. 
  6. "Annual awards of ‘Ghungur' cultural organisation presented". தி இந்து. 14 April 2011 இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110219213801/http://www.hindu.com/2011/02/14/stories/2011021460100200.htm. 
  7. "Archived copy". Archived from the original on 2013-03-07. பார்க்கப்பட்ட நாள் 2013-02-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமிதா_ரவுத்&oldid=3315113" இலிருந்து மீள்விக்கப்பட்டது