உள்ளடக்கத்துக்குச் செல்

மதுபாலா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுபாலா: கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
வகைகாதல்
நாடகம்
இயக்கம்ரவீந்திர கவுதம்
தேவஷிஷ் தார்
இந்தர் தாஸ்
பிரசாத்
நடிப்புதிராஷ்டி தமி
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்2
அத்தியாயங்கள்648
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்28 மே 2012 (2012-05-28) –
9 ஆகத்து 2014 (2014-08-09)

மதுபாலா என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மே 28, 2012 முதல் ஆகத்து 9, 2014 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 648 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடர் இந்திய திரைப்படத்துறை நூற்றாண்டுகால வரலாற்றினை உடையது. இதனை நினைவு கூறும் விதமாக தயாரிக்கப்பட்டது.[2]

இந்தத் தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 18, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பானது.[3]

கதைச்சுருக்கம்

[தொகு]

திரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் பிறக்கும் மதுபாலா என்ற நடுத்தர வர்க்க பெண்ணின் ஆசைகளை மதிப்பீடுகளை திரைப்படப்பிடிப்புத் தள பின்னணியில் விளக்குகிறது அதே தருணம் பிரபல நடிகரான ஆர் கேக்கும் மதுபாலாவுக்கும் இடையில் வரும் காதலையும் இந்த தொடர் விளக்குகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • திராஷ்டி தமி
  • விவியன் ட்சென
  • பல்லவி புரோஹித்
  • ஆர்த்தி பூரி
  • ராகீ டான்டன்
  • பூபீந்தர் சிங்
  • ராசா முராட்

வேறு மொழிகள்

[தொகு]

இந்த தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. கன்னட மொழியில் மறு தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madhubala to end". PinkVilla. 13 June 2014. Archived from the original on 16 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 ஜனவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "COLORS launches its new show "Madhubala...Ek Ishq, Ek Junoon"". AdGully. 22 May 2012.
  3. "மதுபாலா… பாலிமர் டிவியில் புதிய தொடர்". tamil.filmibeat.com. February 12, 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]