மதுபான கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுபான கடை
இயக்கம்கமலக்கண்ணன்
திரைக்கதைகமலக்கண்ணன்
இசைவேத் சங்கர்
நடிப்புகதிர் வேல்
தியானா
அரவிந்த் அண்ணாமலை
என். டி. இராஜ்குமார்
ஒளிப்பதிவுசுமீ பாஸ்கரன்
கலையகம்மான்டேஜ் மீடியா ப்ரொடக்சன்
வெளியீடுஆகத்து 2, 2012 (2012-08-02)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுபான கடை, 2012-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.[1]. இத்திரைப்படத்தின் முழுக்கதையையும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை அடிப்படையாக வைத்து, குடிகாரர்களை முன்னணிக் கதாபாத்திரங்களில் வைத்திருக்கின்றார் அறிமுக இயக்குனர் கமலக்கண்ணன்.[2]

2012, ஆகஸ்ட் 2-ம் திகதி இத்திரைப்படம் வெளியானது.[3]

நடிப்பு[தொகு]

 • கதிர் வேல்
 • தியானா
 • அரவிந்த் அண்ணாமலை
 • என். டி. இராஜ்குமார்
 • இரவி
 • இராமு
 • பருதி
 • இராசன் பாலா

கதைக்கரு[தொகு]

மதுபான கடையில் ஒரு நாள் (அக்டோபர் 1-ம் திகதி) நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்கி இருக்கின்றனர். மது அருந்த வரும் கடை நிலை ஊழியர்கள், பைத்தியமாக வரும் நிலத்தோட சொந்தக்காரர், ஆங்கிலத்தில் பேசியே பிச்சை எடுத்துக் குடிக்கும் குடிகாரர், அடுத்தவர்களை ஏமாற்றி குடிக்கும் குடிகாரர் என்று கடைக்கு வரும் அனைவரின் கதையையும் அவர்களுடைய வசனங்களில் சொல்லியிருக்கிறார். போலி மது விற்பனை, கடை நடத்துபவரின் மகளைக் காதலிக்கும் கடை ஊழியர், கந்து வட்டி, சாதி உணர்வு என அதிகப்படியான கருத்துகளை ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. "Madhubana Kadai Review - Madhubana Kadai Movie Review". Behindwoods.com. பார்த்த நாள் 2012-08-18.
 2. "Tamil film 'Madhubaanakadai'to feature real-life drunkyards". Economic Times. பார்த்த நாள் 29 August 2012.
 3. "Friday Fury-August 3". Sify. பார்த்த நாள் 29 August 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுபான_கடை&oldid=2706503" இருந்து மீள்விக்கப்பட்டது