மதுபனி
மதுபனி | |
---|---|
கடிகாரச்சுற்றுப்படி; மேலிருந்து இடமாக: மதுபனி இரயில் நிலையம், காளி கோயில், காவலர் குடியிருப்புக் கோயில், அனுமார் கோயில், பள்ளிக்கூடம் | |
அடைபெயர்(கள்): மிதிலை நகரத்தின் கலை | |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மதுபனி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°21′07″N 86°04′19″E / 26.35194°N 86.07194°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரதேசம் | மிதிலை பிரதேசம் |
மாவட்டம் | மதுபனி |
அரசு | |
• வகை | சிற்றூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4 km2 (2 sq mi) |
ஏற்றம் | 56 m (184 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,070 |
• அடர்த்தி | 1,800/km2 (4,600/sq mi) |
இனம் | மிதிலை |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி, ஆங்கிலம் |
• வட்டார மொழி | மைதிலி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 847211 |
தொலைபேசி குறியீடு | 06276 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | BR-32 |
பாலின விகிதம் | 1000/877 ♂/♀ |
மக்களவை தொகுதி | மதுபனி மக்களவை தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | மதுபனி சட்டமன்றத் தொகுதி & பிஸ்பி சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | madhubani |


மதுபனி (Madhubani), வட இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் மிதிலை பிரதேசத்தில் உள்ள மதுபனி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.இது கோட்டத் தலைமையிடமான தர்பங்காவிற்கு வடகிழக்கே 26 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரமான பாட்னாவிற்கு 108 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த ஊரின் மதுபானி ஓவியங்கள் இந்திய புவிசார் குறியீடு பெற்றுள்ளது. மதுபனி எனும் சமஸ்கிருத சொல்லிற்கு மது வனம் அல்லது தேன் போன்ற குரல் என்று பொருள்.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,333 குடியிருப்புகள் கொண்ட மதுபனியின் மக்கள் தொகை 7,070 ஆகும். அதில் ஆண்கள் 3,767 மற்றும் பெண்கள் 3,303 உள்ளனர். 6 வயதிற்குட்ட குழந்தைகள் 1050 (14.85 %) உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.85 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3.96 % மற்றும் 0 ஆக உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 88.91%, இசுலாமியர் 10.99% மற்றும் பிற சமயத்தினர் 0.10% ஆக உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhubani | India | Britannica.com". Encyclopædia Britannica. Retrieved 12 November 2016.
- ↑ Madhubani Town Population Census 2011