மதுகுமிலி பரத்
மதுகுமிலி பரத் | |
|---|---|
2019 தேர்தல் சுற்றுப்பயணத்தில் மதுகுமிலி பரத் | |
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | எம். வி. வி. சத்தியநாராயணா |
| தொகுதி | விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| உறவினர் | நந்தமூரி பாலகிருஷ்ணா (father-in-law) ம. வீ. வே. சத்தியநாராயண மூர்த்தி (தாத்தா) நாரா லோகேசு (சகலை) |
| வாழிடம் | விசாகப்பட்டினம் |
| முன்னாள் மாணவர் | பர்டியூ பல்கலைக்கழகம் (தொழிலகப் பொறியியல்) இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை & முதுகலை இணைந்தப் பட்டம்) |
| பணி | தலைவர்-கீதம் |
| இணையத்தளம் | www |
மதுகுமில்லி பரத் என்பவர் இந்திய கல்வியாளரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 18ஆவது இந்திய மக்களவையில் உறுப்பினராக உள்ளார். விசாகப்பட்டினம், ஐதராபாத்து, பெங்களூருவில் அமைந்துள்ள காந்தி தொழில்நுட்ப, மேலாண்மை நிறுவனத்தின் (கீதம்) தலைவராகவும் பணியாற்றுகிறார்.[1] ஐதராபாத்தை தளமாகக் கொண்ட கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியின் நிறுவனரும் ஆவார். இது பொதுக் கொள்கையில் முதுகலை, முனைவர் படிப்புகளை வழங்குகிறது.[2][3]
கல்வி
[தொகு]பரத், 2010ஆம் ஆண்டு மேற்கு லபாயெட்டெ, பர்டூ பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் பாலோ ஆல்டோ, சிஏ, அமெரிக்காவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டில் கூட்டு முதுகலை/முது வணிகநிர்வாகவியல் பட்டத்தையும் பெற்றார்.[4][5]
குடும்பம்
[தொகு]பரத் கீதம் நிறுவனத்தை நிறுவிய ம. வீ. வே. சத்தியநாராயண மூர்த்தியின் பேரன் ஆவார். இவர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் இளைய மகளான நந்தமூரி தேஜசுவினியை மணந்தார்.[6]
அரசியல்
[தொகு]பரத் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் முதல் முறையாக விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டில் இவர் 4414 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[7] 2024 இந்திய பொதுத் தேர்தலில் இவர் மீண்டும் விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[8]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | மதுகுமிலி பரத் | 9,07,467 | 65.42 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | போட்சா ஜான்சி லட்சுமி | 4,03,220 | 29.07 | ▼6.17 | |
| காங்கிரசு | புலுசு சத்தியநாராயணா ரெட்டி | 30,267 | 2.18 | ||
| பிசாக | கே. ஏ. பவுல் | 7,696 | 0.55 | N/A | |
| நோட்டா | நோட்டா | 5,313 | 0.38 | ▼0.96 | |
| வாக்கு வித்தியாசம் | 5,04,247 | 36.35 | |||
| பதிவான வாக்குகள் | 13,87,125 | 71.11 | |||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. இடமிருந்து தெதேக பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sribharat Mathukumilli | GITAM". www.gitam.edu. Retrieved 2024-04-09.
- ↑ "About Us". Master's Program in Public Policy (MPP), Kautilya School of Public Policy, Best MPP Program (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-04-09.
- ↑ .
- ↑ "Bharat Mathukumilli(TDP):Constituency- VISAKHAPATNAM(ANDHRA PRADESH) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-04-09.
- ↑ "About President". gdch.edu.in. Retrieved 2024-04-09.
- ↑ Staff, T. N. M. (2018-10-03). "GITAM founder and ex-MP MVVS Murthi killed in US road accident". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2024-04-09.
- ↑ "Visakhapatnam Constituency Lok Sabha Election Result: Candidates Profiles, Map, Total Votes, Past Results | Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-04-09.
- ↑ "It's official: TDP's Sribharat to vie with Botcha Jhansi from YSRCP for Vizag MP seat" (in en-IN). 2024-03-22. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/its-official-tdps-sribharat-to-vie-with-botcha-jhansi-from-ysrcp-for-vizag-mp-seat/article67980975.ece.