மதீரா மஞ்ச மல்லி
மதீரா மஞ்ச மல்லி | |
---|---|
Jasminum odoratissimum Tenerife | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. odoratissimum
|
இருசொற் பெயரீடு | |
Chrysojasminum odoratissimum |
மதீரா மஞ்ச மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Chrysojasminum odoratissimum, யாசுமினம் ஓடோராடிசிமம்) என்பது முல்லைக் குடும்பத்தின் தாவரங்களில் ஒன்றாகும். 1753 ஆம் ஆண்டு இது குறித்த முதல் பதிப்பேடு உள்ளது.[1]. பின்பு, 2014 ஆம் ஆண்டு தாவரவியல் ஆய்வாளர்களால், இத்தாவரம் மல்லிப் பேரினத்தில் இருந்து, மஞ்ச மல்லிப் பேரினத்திற்கு (Jasminum--> Chrysojasminum) மாற்றப்பட்டது.[2][3] இம்மஞ்ச மல்லிப் பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[4], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[5] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், இதன் தாயகமாக மதீரா தீவு கருதப்படுகிறது. இவற்றின் மணம் அதிகமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது. எனவே, இதன் இப்போதைய தாவரவியல் பெயர் , Jasminum odoratissimum என்பதில் இருந்து, Chrysojasminum odoratissimum என மாற்றியமைக்கப் பட்டது.
பேரினச்சொல்லின் தோற்றம்
[தொகு]அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [6] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [7]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:609669-1
- ↑ https://sisn.pagepress.org/index.php/nhs/article/view/54
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:77144233-1
- ↑ Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/boj.12385
- ↑ முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
- ↑ Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
- ↑ etymonline