மதிப்பு கூட்டு வரி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மதிப்பு கூட்டு வரி இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதிப்பு கூட்டு வரி (இலங்கை வழக்கு: பெறுமதி சேர் வரி) இந்தியாவில் ஏப்ரல் 1, 2005 முதல் மறைமுக வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த விற்பனை வரி விதிப்புகள் அனைத்தும் மதிப்பு கூட்டு வரிமுறையால் மாற்றி அமைக்கப்பட்டது. அரியானா மாநிலமே இந்தியாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மாநிலமாகும். மதிப்பு கூட்டு வரி அறிமுகம் செய்யப்பட்ட பொழுது எதிர்ப்பு தெரிவித்த குசராத்து, உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்னர் மதிப்பு கூட்டு வரியை ஏற்றுக்கொண்டன. ஜூன் 2, 2014 க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் மதிப்பு கூட்டு வரியை நடைமுறை படுத்தி விட்டன.

பின்னணி[தொகு]

உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் விற்பனை வரி வேறுபடுவதால் வரி விகிதமும் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் விற்பனை வரியே மிக முக்கிய வருவாய் ஆகும். தங்களின் வருமான தேவையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் வரிகளை நிர்ணயம் செய்து வந்தன. எனவே மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டன. இதன் விளைவாக மாநிலத்திற்கு இடையேயான தொழில் போட்டி ஏற்பட்டன. அண்டை மாநில நுகர்வோரை கவர வரிகள் குறைத்து வசூலிக்கப்பட்டன. உதாரணமாக மோட்டார் வாகனங்களுக்கு பாண்டிச்சேரியில் விற்பனை வரி குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த பலரும் பாண்டிச்சேரியில் வாகனம் வாங்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் மறைமுகமாக தமிழக அரசின் வருவாய் பாதித்தது. [1]

இது போன்ற வரி விதிப்பு பிரச்சனைகளை களையவும், ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தவும் மதிப்பு கூட்டு வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன .

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0706/04/1070604018_1.htm