மதாரி பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதாரி பாசி
மதாரி பாசி ( 1920-1921) AD
இந்திய விவசாயப் போராளிகளின் தலைவர்
பிறப்பு1860
ஹர்தோய், உத்தரப்பிரதேசம், இந்தியா

மதாரி பாசி இந்திய விவசாயிகளின் போராட்ட இயக்கமான ஏகா இயக்கத்தின் தலைவராக இருந்தவராவார்.[1][2][3]

வரலாறு[தொகு]

இந்தியத் தேசிய காங்கிரசின் ஒரு கிளை இயக்கமான ஏகா இயக்கம்,ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கிலாபத் இயக்கத்துடன தொடர்புடையதாகும்.  ஆனால் நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்தில் காங்கிரசு முனைப்பாக இருந்தபோது, ​​ஏணோ ஏகா இயக்கத்தையும் அதன் உறுப்பினர்களான விவசாயிகளையும் புறக்கணிக்க தொடங்கியது.இந்த சமயத்தில்தான் மதாரி பாசி, ஏகா இயக்கத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் குத்தகைதார்களிடையே ஒரு வளர்ந்துவரும் தலைவராக அடிமட்ட அளவிலிருந்தே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் மத மற்றும் சாதிய வேறுபாடுகளின்று அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்தார். இதன்மூலம் இவர் ஏகா இயக்கத்தை வன்முறைப் பாதையில் நடத்தி சென்று, சுற்றுவட்டாரத்தில் சமூக அடுக்குகளில் மேல் நிலையில் இருந்த நில உடமையளர்களாயிருந்த ஜமீன்தார்களையும், அவர்களின் ஏவாலாட்களாக கருதப்பட்ட கரிந்தாக்களையும், தாலுக்தார்களையும், தேகாதர்களையும் கடுமையாகத் தாக்கி, அவர்களது சொந்த வீடுகளிலேயே சிறைப்படுத்தினார். இதன்மூலம் குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நில உரிமைகளையும் விநியோகிக்கத் தொடங்கினார். இதனால் இவரது பெயரும் இயக்கத்தின் பெயரும் இந்த பகுதிகளில் பெரும் அச்சத்துடன் பார்க்கப்பட்டது.[4] கிலாபத் இயக்கத்துடன் இணைந்து ஏகா இயக்க உறுப்பினர்கள் நடத்தும் வன்முறைச் செயல்பாடுகளைப் பற்றி கேள்விப்பட்ட, காந்தி ஏகா இயக்கத்திலிருந்து தன்னைத் விடுவித்துக் கொண்டார். இதன்மூலம் காங்கிரசின் ஆதரவையும் இழந்த பிறகு, பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளுக்கு ஏகா இயக்கத்தை அடக்குவது மிகவும் சுலபமாகிவிட்டது. பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகளின் ஒடுக்குமுறைக்குப் பிறகு கிட்டத்தட்ட 1922ம் ஆண்டில் இவ்வியக்கம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது. இதனால் உத்தரப்பிரதேசத்தின் காடுகளுக்குள்ளே மறைந்து வாழத் தொடங்கிய மதாரி பாசி இவரது ஏகா இயக்கத்தைச் சார்ந்த விவசாயிகளை இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியுடன் இணைக்க முயற்சித்தார். இவரை உயிருடனோ இறந்த நிலையிலோ காட்டிக்கொடுத்தால் ரூ.1000 வரை சன்மானம் அளிக்க பிரிட்டீஷ் அதிகாரிகள் தயாராக இருந்தாலும் கடைசி வரை அவர்களிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்த மதாரி பாசி 1931ஆம் ஆண்டு மார்ச் 27 அல்லது 28 அன்று இயற்கையாகவே மரணமடைந்தார் என்று பொதுவாக நம்பப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sumit Sarkar (24 January 1989). Modern India 1885–1947. Palgrave Macmillan UK. பக். 224–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-349-19712-5. https://books.google.com/books?id=kOawCwAAQBAJ&pg=PA224. 
  2. A Comprehensive History of India. Sterling Publishers Pvt. Ltd. 1 December 2003. பக். 238–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-2506-5. https://books.google.com/books?id=RAON5AW4yUEC&pg=PA238. 
  3. "मदारी पासी उर्फ एक सदी पूर्व की किसान-गाथा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-09-01.
  4. "Eka Movement, Bookstawa YouTube Channel". YouTube.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Remembering Madari Pasi: The Uncelebrated Peasant Leader of the Eka Movement". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதாரி_பாசி&oldid=3925499" இலிருந்து மீள்விக்கப்பட்டது