மதராசபட்டினம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதராசபட்டினம்
நூல் பெயர்:மதராசபட்டினம்
ஆசிரியர்(கள்):நரசய்யா
வகை:வரலாறு
துறை:மதராசபட்டினத்தின் கதை
காலம்:கிபி 1600 - 1947
இடம்:தமிழ்நாடு
மொழி:தமிழ்
பக்கங்கள்:232
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:2004

மதராசபட்டினம் என்பது, முன்னர் மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னை நகரத்தின் கிபி 1600 முதல் 1947 ஆண்டு வரையிலான கதை கூறும் நூல் ஆகும். நரசய்யா இந்த நூலை எழுதியுள்ளார். பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகம் இதன் முதற் பதிப்பை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதன் இரண்டாம், மூன்றாம் பதிப்புக்கள் முறையே 2008இலும், 2010இலும் வெளிவந்தன.

நோக்கம்[தொகு]

இந்தியாவில் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட நகரங்களுள் காலத்தால் முந்தியது மதராசபட்டினம் என்னும் சென்னைதான். இந்நகரம் பல்வேறு முதன்மைகளைக் கொண்டது. இந்நகரைக் குறித்துப் பிரித்தானியரின் குறிப்புக்களிலும், பல்வேறு நூல்களிலும் காணப்படும் பல விவரங்கள் சுவையானவை. இதன் காலத்தில் தோன்றிய முக்கிய நகரங்களான பம்பாய் (மும்பாய்), கல்கத்தா (கொல்கத்தா) ஆகியவற்றிலும் அதிகமாகக் கவனிக்கத்தக்கது இந்நகரம் என்பதை இந்நூலாசிரியர் உணர்ந்துகொண்டது இந்த நூல் எழுதப்பட்டதற்கு ஒரு காரணமாகத் தெரிகிறது.[1] அத்துடன், மதராசபட்டினம் பற்றிய ஆதாரபூர்வமான நிகழ்வுகளைச் சாதாரண சராசரித் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டது என இதன் நூலாசிரியர் கூறுகின்றார்.[2]

உள்ளடக்கம்[தொகு]

இது வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு வரலாற்று நூலாகவன்றி நிகழ்வுகளின் முக்கியத்துக்கு மட்டும் இடம் கொடுத்திருப்பதாக நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன், அந்நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்த மனிதர்களும் அவர்களது நோக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டிருப்பதுடன், பல சுவையான நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

நூலின் உள்ளடக்கம் பின்வரும் 13 அத்தியாயங்களைக் கொண்டது. 14 ஆவதாக அட்டவணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.[3]

  1. கோரமண்டலக்கரை (சாந்தோமின் பிறப்பும் வளர்ச்சியும்)
  2. பட்டினப் பிரவேசம் (மதராசபட்டினத்தில் ஆங்கிலேயர் வருகை)
  3. கோட்டை சீரமைப்பு மற்றும் சில சம்பவங்கள்
  4. நீதிமுறைகளும் நீதிபதிகளும்: வலங்கை இடங்கை ஜாதிச் சக்கரவுகள் மற்றும் இதர மத சம்பந்தமான சச்சரவுகள்
  5. துபாஷிகள் மற்றும் நில விஸ்தரிப்பும் போக்குவரத்தும்
  6. மதராசபட்டினத்துப் பஞ்சங்களும் அடிமை வியாபாரமும்
  7. கம்பெனி காலத்துச் சம்பவங்களும் மனிதர்களும்
  8. மதராசபட்டினத்து இந்தியப் பெருந்தகைகள்
  9. ஆங்கிலேயர் காலத்துக் கல்வி முறைகளும் அச்சகங்களும்
  10. மதராசபட்டினம் கார்ப்பரேஷன் - மேயர் மற்றும் பத்திரிகைகள், வானொலி
  11. மதராசபட்டினத்துத் திருத்தலங்கள்
  12. மதராசபட்டினத்துச் சரித்திரப் புகழ்பெற்ற இடங்கள், கட்டிடங்கள் மற்றும் தெருக்கள்
  13. வானிலை ஆய்வு மையம்; நில அளவு ஆரம்பப் பணிகள்; நூலகம் மற்றும் அருங்காட்சியகம்
  14. அட்டவணைகள்

குறிப்புகள்[தொகு]

  1. நரசைய்யா, 2006. பக். 11.
  2. நரசைய்யா, 2006. பக். 13.
  3. நரசைய்யா, 2006. பக். 9, 10.

உசாத்துணைகள்[தொகு]

  • நரசய்யா, மதராசபட்டினம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2006.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராசபட்டினம்_(நூல்)&oldid=3618017" இலிருந்து மீள்விக்கப்பட்டது