மதகரி நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதகரி நாயக்கர்
பிறப்பு13 October 1742
சனக்கள், ஒசதுர்கா, சித்திரதுர்க்கா மாவட்டம்
இறப்பு1779
ஸ்ரீரங்கப்பட்டணம்
இறப்பிற்கான
காரணம்
ஐதர் அலியால் சிறைபிடிக்கப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணம் சிறையில் இறந்தார்.
மற்ற பெயர்கள்ராஜா வீர மதகரி நாயகர், கந்துகலி மதகரி நாயகர், துர்கட ஹுலி அல்லது ஐதாம் மதகரி நாயகர்.
அறியப்படுவதுசித்ரதுர்காவின் அரசன்
பட்டம்மடிசிடா கரிய மதவடகிசித மதகரி நாயக்கர்
முன்னிருந்தவர்இரண்டாம் கஸ்தூரி ரங்கப்ப நாயக்கர்

ஒண்டிசலகா மதகரி நாயக்கர் (Ontisalaga Madakari Nayaka) அல்லது ஐந்தாம் மதகரி நாயக்கர் அல்லது கரிகுண்டி நாயக்கர் (1742 - 1782) இந்தியாவிலுள்ள சித்ரதுர்காவின் கடைசி நாயக்க ஆட்சியாளர் ஆவார். இவர் சித்ரதுர்கா நாயக்கர்களில் மிகப் பெரியவராகக் கருதப்படுகிறார். இவர் கி.பி.1754 முதல் 1779 வரை ஆட்சி செய்தார். நிதகல்லு கோட்டையை வெற்றி கொள்ள உதவிய பின்னர் பேஷ்வா முதலாம் மாதவரால் எப்பதேலு பாலேகாரரா கந்தா/மிண்டா (77 பாளையக்காரர்களின் மேலான ஆட்சியாளர்) என்ற பட்டத்தையும் பெற்றார்.[1]

புனைகதையில்[தொகு]

  • டி.ஆர்.சுப்பா ராவ் எழுதிய துர்காஸ்டமனா மதகரி நாயக்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரை வரலாற்று புதினமாகும். இது 1985 இல் சாகித்ய அகாடமி விருதை அவரது மரணத்திற்குப் பின் வென்றது
  • பி.எல்.வேணுவின் கந்துகலி மதகரி நாயகா என்பது மதகரி நாயக்கரின் வாழ்க்கையை விவரிக்கும் மற்றொரு புத்தகமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lewis, Barry. "An Informal History of the Chitradurga Nayakas". Archived from the original on 14 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதகரி_நாயக்கர்&oldid=3859032" இலிருந்து மீள்விக்கப்பட்டது