மண் அரிமானத்தைத் தடுக்கும் முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1. சம உயர வரப்புகள் அமைத்தல். 2. மண் சரிமானத்திற்கு எதிராக பார்கள், பாத்திகள் அமைத்தல். 3. அதிகப்படியான மழைநீர் வெளியேற வடிகால் வசதி அமைத்தல். 4. நிலத்தை மூடக்கூடிய விரைவில் வளரும் தன்மையுடைய பயிர்களைச் சாகுபடி செய்தல். 5. மண் சரிவுக்கு எதிராக வரப்புகள் அமைத்தல். 6. உயரமான மரங்கள் சவுக்கு, யூக்லிப்டஸ், அசோகமரம் போன்றவற்றை வயலைச் சுற்றி வளர்த்தல். 7. மழைநீர் வழிந்தோடும் பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல். 8. உயரமானப் பயிர்களை பயிரிடும் போது உயரம் குறைவான பயிர்களை ஊடுப்பயிராகப் பயிரிடுதல். 9. கால்நடைகளின் மேய்ச்சல் மற்றும் மனிதனின் தேவைக்காகத் தாவரங்களை அழிப்பதைத் தடுத்தல். 10. பாதிக்கப்பட்ட நிலத்தில் வளமான மண் மற்றும் அங்ககப் பொருள்களை அதிகம் இடுதல்.

==உசாத்துணை==தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வேளாண் செயல்முறைகள் பக்க எண்:31