மண்ணின் மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணின் மதிப்பு (Soil value) என்பது மண்ணின் தரத்தை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதாகும்.  இது மண் மாதிரித்  தரவும், வரம்புகளும் 0 (மிகக் குறைந்தது) முதல் 100 (மிக மிக உயர்ந்தது) ஆக வரையறுக்கப்படுகிறது. பயிர் செய்யும் நிலத்தின் மண் மதிப்பானது மண்வகை, மண்ணின் நிலை, மற்றும் தாய் பாறையை வைத்து கணக்கிடப்படுகிறது.

மண்ணின் மதிப்பு மூலம் வேளாண்மையில் நிகர வருமானம் அறியப்படுகிறது. மண்ணின் மதிப்பு, நிலவும் பருவநிலை காரணமாக விளை பொருள்களின் மதிப்பை கணக்கிட உதவுகிறது. மண்ணின் தரத்திற்கு ஒரு அளவு கோலாக ரிச் ஸ்டாண்டர்டு பார்ம் என்ற அளவு கோல் செர்மனி தேசத்தில் 1934ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

மதிப்புகளின் வரம்பு[தொகு]

பின்வரும் நிறங்கள் குறிப்பிட்ட வரம்பு மதிப்புகளுக்கு மண்ணின் தரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது:[1]

மண்ணின் தரம் மதிப்புகளின் வரம்பு நிறம்
மிகவும் தரமற்றது 0 - 18 பழுப்பு
தரமற்றது 18 - 35 சிவப்பு
நடுநிலையானது 35 - 55 ஆரஞ்சு
அதிக தரமானது 55 - 75 மஞ்சள்
மிக அதிக தரமானது 75 - 100 பச்சை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணின்_மதிப்பு&oldid=3614752" இலிருந்து மீள்விக்கப்பட்டது