மண்ணின் உற்பத்தித் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவரங்கள் தங்களது வளர்ச்சிக்கத் தேவையான நீர், காற்று, சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஊட்டப் பொருட்களை நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. பயிர்களுககுத் தேவையான பதினாறு ஊட்டப் பொருட்களின் பதின்முன்று ஊட்டப் பொருட்கள் மண்ணிலிருந்து கிடைக்கின்றன. இந்த ஊட்டப் பொருட்களை தாவரங்கள் எடுத்துக் கொள்வதற்க மண்ணின் ஈரப்பதமும், நிலக்காற்றின் சலனமும் அவசியமானதாகும். இந்த நிரின் சலனமும் காற்றின் சலனமும் நிலத்தில் மேற்கொள்ளப்படும் சாகுபடி வேலைகள் மலம் சீர்திருத்தப்படுகின்றது. பயிர் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் உழவியல் முறைகளைப் பொறுத்து மண்ணின் இயற்பியல் தன்மை அமைகின்றது. மேலும் கரிமப் பொருட்களை நிலத்திலிடுவதால் மண்ணின் உற்பத்தித் திறன் அதிகரிக்கின்றது. சரியான உழவியல் முறைகளை மேற்கொள்ளும் போது அதிக அளவு உற்பத்தியைக் கொடுக்கக்கூடிய மண்ணின் தன்மைக்க உற்பத்தித் திறன் உள்ள மண் என்று பெயர். தாவரத்தின் வளர்ச்சிக்கத் தேவையான அணைத்து ஊட்டப் பொருட்களும் நிரம்பிய மண்ணிற்கு வளமான மண் என்ற பெயர். எல்லா வளமான மண்னையும் உற்பத்தித் திறன் உள்ள மண்ணாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில்

1) மண்ணில் களர் உவர் தன்மை இருந்தாலும்

2) மண்ணில் அமிலத்தன்மை இருந்தாலும்

3) மண்ணில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருந்தாலும்

4) சரியான உழவியல் முறைகளை மேற்கொள்ளாமல் இருந்தாலும்

மண்ணிலுள்ள ஊட்டப் பொருட்களை தாவரங்கள் பயன்படுத்த இயலாமல் உற்பத்தியின் அளவு குறைந்து மண்ணின் உற்பத்தித் திறனும் குறைகின்றது. மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறனை நிர்ணயிக்கம் காரணிகள்

1) மண்ணில் உள்ள சத்துக்கள்

2) மண்ணின் இயற்பியல் தன்மை

3) மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் அளவும் அவற்றின் செயல் திறனும்

4) நிலத்திலிருந்து தாவரத்திற்க கிடைக்கக்கூடிய ஈரப்பதம் 5) மண்ணனி களர் உவர் மற்றம் அமிலத்தன்மை

6) பயிர் உற்பத்திக்கு மேற்கொள்ளப்படும் உழவியல் முறைகள்

7) பயிர்களைத் தாக்கும் நோய்க்கிருமிகள்

மண்ணிலுள்ள சத்துக்களும் உற்பத்தித்திறனும்

தாவரங்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்றவை நீர் மற்றும் காற்றின் மலம் கிடைக்கின்றன. மற்ற 13 மூலப் பொருட்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், காப்பர், துத்தநாகம், போரான், மாலிப்டினம், இரும்பு, மாங்கனீசு மற்றும் குளோரின் போன்றவை மண்ணிலிருந்து கிடைக்கின்றன. மண்ணலிருந்து கிடைக்கும் சத்துப் பொருட்களில் அதிக அளவு தேவைப்படுபவை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம் ஆகிய ஆறு சத்துக்கள் ஆகும். இவற்றக்கு பேரூட்டச் சத்துக்கள் என்று பெயர்.

மண்ணின் வளம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. பல்வேறு இயற்கைக் காரணங்களாலும் மண் வளம் கூடுகின்றது. மண் சிதைவடைவதாலும் தாவரக் கழிவுப் பொருட்கள் மக்குவதாலும் மண் வளம் கூடுகின்றது. இயற்கையில் மழை நீரில் நைட்ரஜன் இருப்பதாலும் மண் வளம் மேலும் ஊட்டமடைகிறது. மண்ணை பரிசோதனை செய்து பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான அளவில் உரங்களை இட்டு நல்ல சத்துப்பொருட்களை சேர்த்து மண்ணை தயார் செய்வதன் மூலம் நல்ல மகசூலை அடையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. பயிர் உற்பத்தி - முனைவர்,து. செந்தில்வேல்-இணைப்பேராசிரியர் (வேளாண்மை) கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டக்கல் மாவட்டம்