உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டல புற்றுநோய் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டல புற்றுநோய் மையங்கள் (Regional Cancer Centres) இந்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளூம் சேர்ந்து நிதியுதவி வழங்கி கூட்டுக் கட்டுப்பாடுடன் இயக்கும் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகும். ஒவ்வொரு மையமும் அதற்கென நியமிக்கப்பட்ட பல மாவட்டங்களுக்கு சேவை செய்வதால் மண்டல மையம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் என இந்தியாவில் தற்போது 25 மண்டல புற்றுநோய் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.[1][2]

இந்தத் திட்டம் முதலில் தேசத்தின் 5 நியமிக்கப்பட்ட மண்டலங்களில் 5 மண்டல புற்றுநோய் மையங்களுடன் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய மையங்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. மேலும் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மண்டல புற்றுநோய் மையத் தகுதியை வழங்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மலபார் புற்றுநோய் மையத்தை பிராந்திய புற்றுநோய் மையமாக தரம் உயர்த்தினார்.[1] In 2011, Chief Minister Oommen Chandy looked to have Malabar Cancer Centre upgraded to the level of a regional cancer centre.[3]

இந்திய மண்டல புற்றுநோய் மையங்கள்[தொகு]

தற்போது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு நிதியளிக்கப்படும் மண்டல புற்றுநோய் மையங்கள்:

பெயர் நகரம் மாநிலம் நிறுவப்பட்டது சான்று
கமலா நேரு நினைவு மருத்துவமனை அலகாபாத் உத்தரப் பிரதேசம் 1931 [4][5][6]
திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் திருவனந்தபுரம் கேரளம் 1981 [4][5]
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் கொல்கத்தா மேற்கு வங்காளம் 1950 [4][5]
குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அகமதாபாது குசராத்து 1972 [4][5][7]
கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் பெங்களூர் கருநாடகம் 1980 [4][5]
மெக்தி நவாசு சங் புற்றுநோய் நிறுவனம் ஐதராபாத்து தெலங்காணா [4][5]
அடையாறு புற்றுநோய் மையம் அடையாறு, சென்னை தமிழ்நாடு 1954 [4][5][8]
புவனேசுவர் போரூவா புற்றுநோய் நிறுவனம் குவகாத்தி அசாம் 1973 [4][5]
ஆச்சார்யா அரிகர் மண்டல புற்றுநோய் மையம் கட்டக் ஒடிசா 1981 [4][5]
டாட்டா நினைவு மையம் பரள், மும்பை மகாராட்டிரம் 1941 [4][5]
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி சிம்லா இமாச்சலப் பிரதேசம் 1977 [4][5]
இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் பட்னா பீகார் 1983 [4][5]
குவாலியர் புற்றுநோய் ஆராய்ச்சி & ஆராய்ச்சி மையம் குவாலியர் மத்தியப் பிரதேசம் 1971 [4][5]
ஆச்சார்யா துளசி மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி & ஆராய்ச்சி மையம் பிகானேர் இராசத்தான் 1940 [4][5]
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி அன்சாரி நகர், புது தில்லி NCR [4][5]
பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் ரோத்தக் அரியானா 1960 [4][5]
ராசுட்டிரா சந்த் துக்டோசி பிராந்திய புற்றுநோய் மருத்துவமனை நாக்பூர் மகாராட்டிரம் 1974 [4][5]
பண்டிட் சவகர்லால் நேரு நினைவு மருத்துவக் கல்லூரி, ராய்ப்பூர் ராய்ப்பூர், சத்தீஸ்கர் சத்தீசுகர் 1963 [4][5]
சவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி புதுச்சேரி 1964 [4][5][9]
சிவில் மருத்துவமனை அய்சால் மிசோரம் 1896 [4][5]
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனம் சண்டிகர் சண்டிகர் 1962 [4][5]
சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் இலக்னோ உத்தரப் பிரதேசம் 1983 [4][5]
அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் காஞ்சிபுரம் தமிழ்நாடு [4][5]
செர்-இ-காசுமீர் மருத்துவ நிறுவனம் சௌரா, சிறிநகர் காஷ்மீர் 1988 [4][5]
பரிதாபாத்து ஆசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் தில்லி இந்தியா 2010 [4][5][10]
குசராத்து அப்போலோ சிபிசிசி மருத்துவ நிறுவனம் அகமதாபாது இந்தியா 2003 [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Government of India. 'National Cancer Control Programme'.
  2. "National Cancer Control Programme". The National Institute of Health and Family Welfare, Indian Ministry of Health and Family Welfare.
  3. The Hindu. State seeks special financial package of Rs.11,000 crore.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 "Kidwai Memorial Institute of Oncology Official Website. 'Regional Cancer Centres in the Country'". Archived from the original on 2011-11-07. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 5.20 5.21 5.22 5.23 5.24 5.25 WHO India. பரணிடப்பட்டது ஏப்பிரல் 26, 2012 at the வந்தவழி இயந்திரம்
  6. "Kamla Nehru Memorial Hospital Official Website". Archived from the original on 2012-01-04. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  7. Gujarat Cancer Research Institute Official Website.
  8. "Cancer Institute (WIA)". Archived from the original on 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  9. Regional Cancer Centre, JIPMER.
  10. Asian Institute of Medical Sciences Faridabad
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டல_புற்றுநோய்_மையம்&oldid=3590654" இலிருந்து மீள்விக்கப்பட்டது