மண்டல அறிவியல் மையம், சாலக்குடி

ஆள்கூறுகள்: 10°18′N 76°20′E / 10.30°N 76.33°E / 10.30; 76.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டல அறிவியல் மையம், சாலக்குடி
Regional Science Centre, Chalakudy
Map
நிறுவப்பட்டது2021
அமைவிடம்சாலக்குடி, திருச்சூர் மாவட்டம், கேரளம்
ஆள்கூற்று10°18′N 76°20′E / 10.30°N 76.33°E / 10.30; 76.33
வகைஅறிவியல் காட்சியகம்
உரிமையாளர்கேரள அரசு

மண்டல அறிவியல் மையம், சாலக்குடி (Regional Science Centre, Chalakudy) என்பது இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடியில் அமைந்துள்ள ஒரு அறிவியல் அருங்காட்சியகம் ஆகும். இது கேரள அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தன்னாட்சி நிறுவனமாகும். இது பொது மக்களிடையே, குறிப்பாகக் குழந்தைகளிடையே அறிவியல் மற்றும் அறிவியல் மனநிலையைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு மையமாக உள்ளது. இது 2021-ல் செயல்படத் தொடங்கியது.

நோக்கம்[தொகு]

அறிவியல் மற்றும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே அறிவைப் பரப்பும் நோக்கத்தில், இந்த மண்டல அறிவியல் மையம் கேரள அரசால் தொடங்கப்பட்டுள்ளது.[1] கேரள மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் கீழ் வரும் இந்த மையம், மாணவர்கள் அறிவியலில் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை நடத்த உதவும்.

சாலக்குடி மண்டல அறிவியல் மையம், தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தின் 'புதுமை மையங்களில்' ஒன்றாகும்.[2]

வரலாறு[தொகு]

சாலக்குடி மண்டல அறிவியல் மையத்திற்கான அடிக்கல் 2010-ல் நாட்டப்பட்டது. இது பிப்ரவரி 2021-ல் செயல்பாட்டுக்கு வந்தது.[3]

மையம்[தொகு]

சாலக்குடி அறிவியல் மையம் கேரளாவின் மூன்றாவது மண்டல அறிவியல் மையமாகும் (மற்ற இரண்டும் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது).[4] இது கேரள மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் முதல் துணை மையமாகும்[1]

வசதிகள்[தொகு]

அறிவியல் மாடம், அறிவியல் பூங்கா, குழந்தைகளுக்கான முப்பரிமாண அரங்கம், போன்ற வசதிகள் தற்போது இங்கு உள்ளன.[5] இம்மையத்தின் முக்கிய ஈர்ப்பாக 5000 சதுர அடி கோளரங்கம் உள்ளது.[3] முப்பரிமாண காட்சியகம் என்பது ஒரு பெரிய திரைப்பட வெளியிடும் கருவியுடன் கூடிய காட்சியகம் ஆகும். இதில் ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து கோளரங்க காட்சிகளைக் காண முடியும்.[3] அறிவியல் காட்சியகங்கள், புதுமையாக மையம் மற்றும் அலுவலக வளாகம் கட்டிடத் தொகுதி 27000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.[6] இம்மையம் மையம் 3 தளங்களில் அமைந்துள்ளது.[7]

இலக்கு வைக்கப்பட்ட நான்கு அறிவியல் காட்சியகங்களில், பொது அறிவியல் காட்சியகம் மற்றும் கணிதக் காட்சியகம் தற்போது செயல்பட்டு வருகின்றன.[3][6]

அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய சபை, மாணவர்களிடையே அறிவியல் திறனை வளர்ப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வடிவமைக்கப்பட்ட புதுமை மையத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது. புத்தாக்க மையத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் நூலகம் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான பாடங்களில் பல்வேறு படிப்பு வகுப்புகளையும் சிறப்புப் பாடங்களில் குறுகிய காலப் பயிற்சியையும் அளிக்கின்றது.[3]

வான்வழிப் பார்வைக்காக உயர் தெளிவுத்திறன் கொண்ட தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த ஆய்வகம், மாலை 6.30 மணிக்குப் பிறகு நட்சத்திரங்கள் மற்றும் கோள்களைக் காண உதவுகின்றது.[3] சிறப்பு வான் நிகழ்வுகளின் போது இந்த மையத்தில் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.[3]

இந்த மையத்தில், முதன்முறையாக முடிவற்ற தாழ்வாரங்கள் மற்றும் முடிவற்ற பிரதிபலிப்புகளுடன் கூடிய கண்ணாடி பிரமை நிறுவும் பணியும் நடந்து வருகிறது.[8]

அமைவிடம்[தொகு]

திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் பனம்பிள்ளி நினைவு அரசு கல்லூரி அருகே நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மையம் அமைந்துள்ளது.[4][9]

நுழைவுக் கட்டணம்[தொகு]

அறிவியல் மையத்தில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.20 மற்றும் நான்கு முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "PRD Live - ചാലക്കുടി സയൻസ് സെന്റർ കേരളത്തിന് അഭിമാനം : മുഖ്യമന്ത്രി".
  2. "Innovation Hub" (in en). NCSM. https://ncsm.gov.in/activities-main/development/innovation-hub. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "PRD Live - ശാസ്ത്രലോകത്തിന് വഴിതുറന്ന് ചാലക്കുടി".
  4. 4.0 4.1 "Third Regional Science Centre to come up in Chalakudy, Kerala". The Times of India. 18 August 2012. https://timesofindia.indiatimes.com/city/kochi/third-regional-science-centre-to-come-up-in-chalakudy-kerala/articleshow/15543686.cms. "Third Regional Science Centre to come up in Chalakudy, Kerala". The Times of India. 18 August 2012.
  5. "PRD Live - ചാലക്കുടി റീജിയണൽ സയൻസ് സെന്ററിൽ മന്ത്രി ആർ ബിന്ദുവിന്റെ സന്ദർശനം".
  6. 6.0 6.1 "ശാസ്ത്രലോകത്തിന് വഴിതുറന്ന് ചാലക്കുടി" (in ml). malayalamexpressnews.com. 17 February 2021. https://malayalamexpressnews.com/special/chalakudy-paves-way-for-science/cid2193437.htm. 
  7. "ചാലക്കുടി റീജനൽ ശാസ്ത്ര കേന്ദ്രം പ്രവർത്തനം പുനരാരംഭിച്ചു" (in ml). ManoramaOnline (Malayala Manorama). https://www.manoramaonline.com/district-news/thrissur/2021/10/19/thrissur-chalakudy-regional-science-centre.html. 
  8. "Mirror Maze to come up at Regional Science Centre, Chalakudy". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/kochi/2020/sep/13/mirror-maze-to-come-up-at-regional-science-centre-chalakudy-2196163.html. 
  9. "Regional Science Centre at Chalakudy to be opened in February". English.Mathrubhumi. https://english.mathrubhumi.com/news/kerala/regional-science-centre-at-chalakudy-to-be-opened-in-february-1.5394864. "Regional Science Centre at Chalakudy to be opened in February". English.Mathrubhumi.